”சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைங்க... நான் காசு தரேன்” என்று சிரித்தபடி பேட்டியளித்துள்ளார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று பத்திரியாளர் சந்திப்பில் ‘ஜெய் பீம்’ சர்ச்சை குறித்து பேசும்போது,
”அன்புமணி எழுதிய கடிதத்தின் வலி உண்மைத்தன்மையை மறுக்க முடியாது. காவல் ஆய்வாளர் அந்தோணிசாமி கதாபாத்திரத்தின் பெயரை ஏன் மாற்றினீர்கள் என்று கேட்கிறார். அதேபோல, படத்தில் இடம்பெற்ற வன்னியர் சங்க அடையாளம் யாருக்கும் தெரியாமல் வைத்திருக்க முடியாது. அது வன்னியர் சங்க குறியீடு என்பது உலகத்துக்கே தெரியும். அதனை தவிர்த்திருக்கலாம். நான் படம் பார்க்கும்போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. காட்சியோடு மூழ்கிவிட்டேன். எல்லோரும் சொன்னபிறகுதான் தெரிந்தது. இல்லையென்றால் சூர்யா தம்பியிடம் ’எடுத்திடலாமே’ என்று சொல்லியிருப்பேன்.
குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை எடுத்து இன்னொரு சமூகத்துக்கு வலியை ஏற்படுத்தக்கூடாது என்பது எனது கருத்து. அதேபோல, எட்டி உதைக்கறதுக்கு என் தம்பி சூர்யா செந்திலா என்ன? அந்த மாதிரியெல்லாம் பதிவிடக்கூடாது. சூர்யாவுக்கு இதெல்லாம் தெரியாது. கலை இயக்குநர், இயக்குநர்தான் செய்திருப்பார்கள்.
சூர்யா குடும்பத்தை எனக்கு நல்லாத் தெரியும். எந்த பிரச்சனைக்கும் தீர்வுகாணத்தான் நினைப்பார்கள். புதிய பிரச்சனையை உருவாக்கமாட்டார்கள். தேவையில்லாமல் அவரை உதையுங்க.. மிதியுங்க என்கிறார்கள். அப்படி பதிவு போட்டவரை வேண்டுமென்றால் உதையுங்க. மிதியுங்க. நான் காசு கொடுக்கிறேன்” என்று சிரித்தபடி கூறியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்