மகாராஷ்டிராவில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட 26 நக்சலைட்டுகளில், அந்த அமைப்பின் முக்கிய தலைவர் மிலிந்த் டெல்தும்டே-வும் ஒருவர் என அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் 'சி-60' என்ற சிறப்பு கமாண்டோ படையினர் என்கவுன்டரொன்றை நடத்தியிருந்தனர். அதில் நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆண்கள் 20 பேர், பெண்கள் 6 பேர் என மொத்தம் 26 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மிக முக்கியமான எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புடைய நக்சல் அமைப்பின் தலைவர் மிலிந்த் டெல்தும்டே-வும் ஒருவர் என காவல் துறை தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: மகாராஷ்டிரா: வனப்பகுதியில் பதுங்கியிருந்த 26 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் எல்கர் பரிஷத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மிலிந்த் டெல்தும்டே தலைமறைவானவராக அறிவிக்கப்பட்டிருந்தார் என்றும் காவல் துறை கூறியுள்ளது. பீமா கோரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆனந்த் டெல்தும்டே-வின் சகோதரர் மிலிந்த் டெல்தும்டே என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்