'இதை விட வெட்கக்கேடான கருத்து சித்துவிடம் இருக்க முடியாது' என கடுமையாக சாடியுள்ளார் கவுதம் கம்பீர்.
பஞ்சாப் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருப்பவர் நவ்ஜோத் சிங் சித்து. இவர் நேற்று முன்தினம் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள குருத்வாரா புனிதத்தலத்துக்கு வழிபாடு செய்யச் சென்றார். அப்போது நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் சார்பில் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். குருத்வாராவில் வழிபட்ட பின் சித்து அளித்த பேட்டியில், 'பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் என் பெரியண்ணன்' என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக காங்கிரசுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், நவ்ஜோத் சிங் சித்துவை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறுகையில், ''பாகிஸ்தான் ராணுவ தளபதி பாஜ்வாவை கட்டிப்பிடித்து, கர்தார்பூர் சாஹிப் சென்று இம்ரான் கானை பெரிய அண்ணன் என்று அழைக்கிறார் சித்து. கடந்த ஒரு மாதத்தில் காஷ்மீரில் 40 பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது குறித்து சித்து கருத்து எதுவும் கூறவில்லை.
இந்தியாவை பாதுகாக்க விரும்பும் மக்களுக்கு எதிராக அவர் செயல்படுகிறார். நவ்ஜோத் சிங் சித்து முதலில் தனது பிள்ளைகளை எல்லைக்கு அனுப்ப வேண்டும். அவரது பிள்ளைகள் ராணுவத்தில் இருந்திருந்தால், அவர் இம்ரான் கானை தனது பெரிய அண்ணன் என்று அழைத்திருப்பாரா? இதை விட வெட்கக்கேடான கருத்து சித்துவிடம் இருக்க முடியாது'' என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3qXxBi3'இதை விட வெட்கக்கேடான கருத்து சித்துவிடம் இருக்க முடியாது' என கடுமையாக சாடியுள்ளார் கவுதம் கம்பீர்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்