புதுச்சேரியில் 10 ஆயிரம் ரூபாய் கடன் நிலுவைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டு, கடன் பெற்ற வியாபாரியையும், அவரது சகோதரரையும் ரவுடிகள் தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்த புடவை வியாபாரியான ஜான்பால் என்பவர், குமார் என்பவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, அதில், 20 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்த குமாரின் நண்பரான பிரகாஷ் என்பவர், ஜான்பாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் தொடர்பாக பேசுவதற்கு நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, ஜான் பாலும், அவரது சகோதரர் சதிஷ் குமாரும் விழுப்புரம் சாலையில் உள்ள இந்திரா காந்தி சதுக்கத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த பிரகாஷ், ரவுடி தட்டாஞ்சாவடி முத்து ஆகியோர் ஒன்றரை லட்சம் ரூபாய் தருமாறு ஜான் பாலிடம் கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், 10 ஆயிரம் மட்டுமே நிலுவை வைத்திருப்பதாக கூறியபோது, எதிர்தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும், சகோதரர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி கீழே இருந்த செங்கலை தூக்கி அடித்துள்ளனர். இது தொடர்பான காணொலி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஜான்பால் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷை கைது செய்துள்ள ரெட்டியார்பாளையம் காவல்துறையினர், தலைமறைவான தட்டாஞ்சாவடி ரவுடி மூத்து மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3kBi3gfபுதுச்சேரியில் 10 ஆயிரம் ரூபாய் கடன் நிலுவைக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டு, கடன் பெற்ற வியாபாரியையும், அவரது சகோதரரையும் ரவுடிகள் தாக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வினோபா நகரை சேர்ந்த புடவை வியாபாரியான ஜான்பால் என்பவர், குமார் என்பவரிடம் இருந்து 30 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, அதில், 20 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார். இந்நிலையில், கடன் கொடுத்த குமாரின் நண்பரான பிரகாஷ் என்பவர், ஜான்பாலை தொலைபேசியில் தொடர்புகொண்டு கடன் தொடர்பாக பேசுவதற்கு நேரில் வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து, ஜான் பாலும், அவரது சகோதரர் சதிஷ் குமாரும் விழுப்புரம் சாலையில் உள்ள இந்திரா காந்தி சதுக்கத்திற்கு சென்றுள்ளனர்.
அங்கிருந்த பிரகாஷ், ரவுடி தட்டாஞ்சாவடி முத்து ஆகியோர் ஒன்றரை லட்சம் ரூபாய் தருமாறு ஜான் பாலிடம் கேட்டுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், 10 ஆயிரம் மட்டுமே நிலுவை வைத்திருப்பதாக கூறியபோது, எதிர்தரப்பினர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. மேலும், சகோதரர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி கீழே இருந்த செங்கலை தூக்கி அடித்துள்ளனர். இது தொடர்பான காணொலி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ஜான்பால் கொடுத்த புகாரின் அடிப்படையில், பிரகாஷை கைது செய்துள்ள ரெட்டியார்பாளையம் காவல்துறையினர், தலைமறைவான தட்டாஞ்சாவடி ரவுடி மூத்து மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்