பா.ஜ.க தொடர் போராட்டங்களை அறிவிப்பதன் மூலம் தன்னை பலம் வாய்ந்த எதிர்கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகிறது. மற்றொருபுறம் அதிமுக பலமான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து பார்ப்போம்.
கொரோனா பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அனைத்து நாட்களிலும் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டுமென கோரி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதையடுத்து ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதை தங்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக உரிமை கொண்டாடியது பா.ஜ.க.
அதேபோல ''மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தி, பாஜக சார்பில், 11 மாவட்டங்களில் நாளை (நவ.19) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மேலும் ''பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5 குறைப்பதாக திமுகதேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு, தற்போது ரூ.3 மட்டுமே குறைத்துஉள்ளனர். அனைத்து மாநிலங்களிலும், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபில் கூட பெட்ரோல் விலையை ரூ.8 முதல் ரூ.10 வரை குறைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு திமுக தயக்கம் காட்டி வருவதைக் கண்டித்து, வரும் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்'' எனவும் அண்ணாமலை கூறியிருக்கிறார்.
இப்படியான தொடர் போராட்டங்களை பாஜக அறிவித்துக்கொண்டிருக்க, அதிமுக தலைமையோ சைலண்ட் மோடில் இருக்கிறது. மழை, வெள்ளபாதிப்புகளில் கூட முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு நடத்திய பிறகு, ஓரிரு நாட்கள் கழித்து தான் எடப்பாடி பழனிசாமி களத்திற்கு வந்து பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே ஆய்வு நடத்திய விவாதப்பொருளானது. இதையடுத்து அவர்கள் இருவரும் இணைந்து நிவாரண பொருட்களை வழங்கினர். அதிமுக சரியான எதிர்கட்சியாக செயல்பட தவறிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுகவின் இந்த செயலற்ற தன்மையை பா.ஜ.க தனக்கு சாதகமாக பயன்படுத்திகொள்வதாக கூறப்படும் நிலையில், இது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியனிடம் பேசினோம்.
''அதிமுகவுக்குள் இரட்டைதலைமை உள்ளிட்ட குழப்பமான சூழல் நிலவினாலும், இரட்டையிலையை கைவிடக்கூடாது என தொண்டர்கள் நினைத்தார்கள். அதன்படிதான் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களித்து அதிமுகவை எதிர்கட்சியில் அமரவைத்தார்கள். இருப்பினும் தொடர்ந்து கட்சியில் அதிகாரப்போட்டி நீடிக்கவே, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தோற்கடித்துவிட்டார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 19சதவீதம் அளித்த வாக்குகளைக்காட்டிலும், சட்டமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குகளை அளித்து அதிமுக தலைமைக்கு மக்கள் ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். இரட்டை இலையை காப்பாற்ற வேண்டும் என மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் அதிமுக அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டது. சசிகலா, ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பிரச்னை இவையெல்லாம் ஒருங்கே இணைந்து அதிமுகவை பலவீனப்படுத்தவே, இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. பாஜகவை பொறுத்தவரை, அதிமுக தங்களுக்குள்ளான சண்டையை சரிசெய்து பலமுடன் இருந்தால் அவர்களை 2024 தேர்தலில் இணைந்து பயணிப்பார்கள். அப்படியில்லாமல் அதிமுக பலவீனமடைந்துவிட்டால் அந்த இடத்தை சுவீகரிக்கப்பார்ப்பார்கள். கட்சி பலவீனமாகி வாக்குகள் பிரியும் சூழல் ஏற்பட்டால், அதை எப்படி தனக்கா வாக்காக அறுவடை செய்ய முடியும் என்பதில்தான் பாஜக கவனம் செலுத்தும்.
தன்னுடைய இருப்பதை பதிவு செய்ய பா.ஜ.க போராடி வருவதன் ஒருபகுதியாகத்தான் இந்த போராட்டங்களை பார்க்கமுடியும். ஆனால், பா.ஜ.கவின் இந்த முயற்சி பலிக்காது. காரணம், பெட்ரோல், டீசல் விலை மத்தியில் அவர்களே ஏற்றிவிட்டு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல் விலை ஏற்றி 24 லட்சம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். 5 மாநில தேர்தல் வருவதையொட்டி விலையை குறைத்துள்ளனர். இதை மக்கள் நன்கு அறிந்துள்ளனர். அரசியல் ரீதியாக அவர்கள் நடத்தும் இந்த போராட்டங்கள் எந்த அளவிற்கு மக்களிடம் எடுபடும் என சொல்லமுடியாது. மதம் தொடர்பான அரசியலை கையிலெடுத்து தங்கள் இருப்பை தமிழகத்தில் பதிவு செய்ய பார்க்கிறார்கள்.
பா.ஜ.கவின் இந்த போராட்டங்கள் திமுகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. எதிரிகள் உதிரியாவது திமுகவுக்கு மேலும் பலம்தானே தவிர பலவீனம் அல்ல. தற்போதைக்கு பா.ஜ.க முன்னெடுக்கும் முயற்சிகள் யாவும் அதிசீக்கிரமே பலனளிக்கூடியதல்ல; அது ஒரு நீண்ட கால ப்ராஸஸ்'' என்று தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3HuapOqபா.ஜ.க தொடர் போராட்டங்களை அறிவிப்பதன் மூலம் தன்னை பலம் வாய்ந்த எதிர்கட்சியாக நிலைநிறுத்திக்கொள்ள முயன்று வருகிறது. மற்றொருபுறம் அதிமுக பலமான எதிர்கட்சியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இது குறித்து பார்ப்போம்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்