கொடைக்கானால் மலைப்பகுதி சுற்றுலாவிற்கான ஹெலிகாப்டர் பயனபடுத்த ஏற்ற இடமாக உள்ளதாக இந்திய வான்வெளி போக்குவரத்துத்துறை நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டிற்காக ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து பல கட்டமாக ஆய்வு பணிகள் செய்தன. அதில் நகருக்கு மேலே சின்னபள்ளம் என்ற மலைப்பகுதி, முடிவாக தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியை இந்திய வான்வெளி போக்குவரத்துத்துறை நிபுணர் குழு நேரில் ஆய்வு செய்தது. நிபுணர் குழுவின் தலைவர் மார்கன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளார்களுக்கு பேட்டியளித்த மார்கன், ''தேர்வு செய்யப்பட்ட சின்னப்பள்ளம் பகுதி நடுத்தர ஹெலிகாப்டர்கள் இறங்குவதற்கு ஏற்ற இடம் என்றும், அப்பகுதியில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த இருபது நாட்களுக்குள் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உருவாகும் ஹெலிகாப்டர் சுற்றுலா குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், இந்த தளத்தை சுற்றுலாவிற்கு மட்டும் பயன்படுத்தாமல், மக்களின் மருத்துவ அவசரத் தேவைக்காவும், காட்டுத்தீயை கட்டுப்படுத்த தேவையான வசதிகளையும் உள்ளடக்கிய சேவையாகவும் கொண்டு வந்தால் வரவேற்போம் எனவும் தெரிவித்தனர். மேலும் ஹெலிகாப்டரால் உருவாகும் ஒலியால் வன விலங்குகள் அச்சமடைவது, விவசாய பயிர்கள் காற்றினால் சேதமடைவது, வீடுகளில் அதிர்வு ஏற்படுவது குறித்தும் ஆய்வு செய்து முறையாக இந்த சேவையை கொண்டு வர வேண்டும் என்று கொடைக்கானல் மக்கள் தெரிவித்துள்ளனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்