கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் மேலும் ஒரு நாள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபால், அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை கடந்த 25ஆம் தேதி சேலத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். இம்மாதம் 8ஆம் தேதி வரை காவலில் வைக்க மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், இருவரையும் 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீஸார் 28ஆம் தேதி மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் சூழல் குறித்த ஆலோசனைக் கூட்டம்
நேற்றுடன் 10 நாட்கள் முடிவடைந்த நிலையில், குன்னூர் நீதிமன்றத்தில் தனபால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த காவல்துறை சார்பில் மேலும் மூன்று நாட்கள் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு ஒருநாள் மட்டும் விசாரணைக்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்