நாட்டின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் உரையை அமைச்சர் பொன்முடி வாசித்தார். அதில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வழங்கும்போது அந்த நிலத்தின் முழு உரிமையையும் எந்த நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அத்தகைய திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார். அதேநேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள், பகைமை உணர்வு ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய பிரச்னைகளுக்கு அன்பெனும் பொது மொழி கொண்டு தீர்வு கண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3DlaWzUநாட்டின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக தமிழ்மொழியை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலினின் உரையை அமைச்சர் பொன்முடி வாசித்தார். அதில், மழையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க வேண்டியிருந்ததால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். உலகின் மிகவும் பழமையான மொழிகளுள் ஒன்றான தமிழ், இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தேசிய மொழியாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்மொழியை இந்தியாவின் ஆட்சிமொழிகளுள் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.
ரயில்வேக்கு சொந்தமான நிலங்களை மெட்ரோ ரயில் திட்டத்திற்காக வழங்கும்போது அந்த நிலத்தின் முழு உரிமையையும் எந்த நிபந்தனையுமின்றி வழங்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாட்டின் மின் உற்பத்தி திட்டங்கள் பலவற்றுக்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். சமூக பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதன் மூலம் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அத்தகைய திட்டங்களையும் பட்டியலிட்டுள்ளார். அதேநேரத்தில் மாநிலங்களுக்கு இடையேயான தேவையற்ற வழக்குகள், பகைமை உணர்வு ஆகியவற்றால் வளர்ச்சி பாதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய பிரச்னைகளுக்கு அன்பெனும் பொது மொழி கொண்டு தீர்வு கண்டு முன்னேற்றப் பாதையில் நடைபோடுவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்