கரூரில் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை வழக்கில், உண்மையான குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக, சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி நிர்வாகம், மாணாக்கர்களின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட மாணவி படித்த தனியார் பள்ளி நிர்வாகம், தங்கள் பள்ளி மாணாக்கர்களின் பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், ப்ளஸ் டூ மாணவியின் தற்கொலையில் ஆசிரியர்களுக்கோ பள்ளிக்கோ எவ்வித தொடர்பும் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. காவல்துறை விசாரணைக்கு பின் கண்டுபிடிக்கப்படும் உண்மையான குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் பள்ளி உறுதியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இந்த கடினமான சூழ்நிலையில் வெளிவரும் கருத்துகளுக்கு பெற்றோர்களும் மாணவர்களும் செவி சாய்க்க வேண்டாமென பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. தங்கள் தரப்பு விளக்கத்தை பள்ளியின் லட்டர் பேடில் முறைப்படி அறிக்கையாக வெளியிடாமல் மாணாக்கர்களின் பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்