Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாட தூத்துக்குடி திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம்

https://ift.tt/3D8tCTg

"வருங்காலத்திலும் திமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்க மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்க இளைஞரணியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் பேசியுள்ளார்.

தூத்துக்குடி வருகிற நவம்பர் 27ஆம் தேதி திமுக மாநில இளைஞரணி அமைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு  தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு இளைஞரணி நிர்வாகிகள் இடையே உரையாற்றினார்.
image
அப்போது அவர் கூறுகையில், "நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெருவாரியாக வெற்றி பெறுவதற்கு இளைஞர் அணியின் தேர்தல் பணி மிகவும் முக்கியமானது. இங்கு உள்ள ஒவ்வொருவரும் தங்களது தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொண்டது தான் தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக கூட்டணி கட்சியினர் அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. எனவே இந்த பணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர வேண்டும். மக்கள் நலன் ஒன்றையே மனதில் வைத்து நாளும் சிறப்பாக செயல்படும் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்றால் இளைஞர்கள் இனிவரும் காலங்களிலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். மக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக நியாய விலை கடைகளில் தரமான பொருள்கள் வழங்கப்படுவதை திமுக இளைஞர் அணியினர் உறுதி செய்ய வேண்டும்.
நியாய விலை கடைகளில் தரமான பொருட்களையே வழங்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே ரேஷன் பொருளை நம்பி வாழும் குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்குவதை திமுக இளைஞரணியினர் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் கழக மாநில இளைஞரணி அமைப்பாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, அன்றைய தினம் அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளை பெருவாரியான இடங்களில் வெற்றிபெற செய்ய அயராது உழைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ராஜன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்