கரூரில் வாகன சோதனையின்போது வேன் மோதி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் உயிரிழந்தார்.
கரூர் சுக்காலியூரில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகராஜ் வாகன் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதிவேகமாக வந்த வேன் ஒன்றை தடுத்த நிறுத்த கனகராஜ் முயன்றுள்ளார். ஆனால் அந்த வேன் அவர்மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமுற்ற அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாகனம் குறித்த தகவல்களை அறிய போலீசார் அந்தப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3oRSsAO

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்