அருணாச்சலப்பிரதேசத்தில் சீனா, 100க்கும் அதிக வீடுகளை கட்டியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இந்திய எல்லைப்பகுதிகளில் சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், அமெரிக்க ராணுவம் தற்போது இந்த ஆக்கிரமிப்பை சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான முன்னேற்றங்கள் அடங்கிய அறிக்கை என்ற பெயரில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதில், இந்திய எல்லைப்பகுதியில் பிரச்னைக்குரிய இடத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளை சீனா கட்டியுள்ளதாக செயற்கைக்கோள் புகைப்படங்களை அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ளது. மெக் மகன், டிசரி ச்சைவ் நதிக்கரையை ஒட்டியப் பகுதி உள்ளிட்ட மேலும் சில இடங்களில் சீன ராணுவம் குடியிருப்புகளையும், போர் பயிற்சிக்குத் தேவையான கட்டமைப்புகளையும் உருவாக்கி வருவதாக தொடர்ந்து சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வந்தநிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமெரிக்க ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக இந்திய ராணுவத்துடன் சீன ராணுவம் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் அதேவேளையில், இதுபோன்ற ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதால் எல்லைப்பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புத்துறையின் அறிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதுகுறித்து தீவிரமாக ஆராயப்பட்டு வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது. தங்கள் தரப்பிலும் எல்லைகளில் பலப்படுத்தப்படும் கட்டமைப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பொருட்கள் ரூ. 83 கோடிக்கு விற்பனை - அமைச்சர் நாசர்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்