சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் அங்காங்கே குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. மேலும் வீடுகளில் புகுந்த மழைநீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை நீடித்து வருகிறது. நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, நங்கநல்லூர், ஈக்காடுதாங்கல், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. முகப்பேர், சூளைமேடு, வியாசர்பாடி, பெரம்பூர், ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், அம்பத்தூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், ராயபுரம், திருவொற்றில் பகுதிகளிலும் இடி, மின்னலுயுடன் விடாமல் மழை பெய்கிறது.
தொடர் மழையால் சென்னையின் முக்கிய சாலைகளில் மழை வெள்ளம் குளம் போல் தேங்கியுள்ளது. ஜி.என்.செட்டி சாலை, சென்ட்ரல் அருகே உள்ள முத்துசாமி சாலை, ஜெமினி மேம்பாலத்தை சுற்றியுள்ள சாலைகளிலும் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவு முதல் மழை நீடித்து வருகிறது. அதிகாலை அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்