Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

'வார்னர் தொடர் நாயகனாக இருப்பார் என்று முன்பே பயிற்சியாளரிடம் கூறினேன்' - ஆரோன் பின்ச்

வார்னர் தொடர் நாயகனாக இருப்பார் என்று முன்பே பயிற்சியாளரிடம் கூறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளார் ஆரோன் பின்ச்.
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வந்த 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த அந்த அணியின் டேவிட் வார்னர் 289 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இதற்காக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. டி20 உலகக் கோப்பை வென்ற அணியிலிருந்து தொடர் நாயகன் விருதினை பெறுவது இது இரண்டாவது முறையாகும். இதற்குமுன்பு 2010ஆம் ஆண்டில் இங்கிலாந்து டி20 உலகக் கோப்பை வென்றபோது கெவின் பீட்டர்சன் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.
 
image
மோசமான ஃபார்ம் காரணமாக 2021 ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் டேவிட் வார்னரிடம் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்தபின் சில போட்டிகளில் வார்னர் எதிர்பார்த்த பேட்டிங் செய்யவில்லை என்பதால், அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இதனால் டேவிட் வார்னர் பேட்டிங் ஃபார்ம் மீது விமர்சனங்கள் கடுமையாக எழத் தொடங்கின. அவை அனைத்துக்கும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் தனது பேட்டிங் மூலம் வார்னர் பதில் அளித்துவிட்டார்.
 
image
இந்நிலையில், போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய கேப்டன் ஆரோன் பின்சிடம், வார்னரை எப்படி ஆதரித்தீர்கள் என்று கேட்டபோது, ''தொடர் நாயகனாக டேவிட் வார்னர் வருவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு நான் ஜஸ்டின் லாங்கரை (பயிற்சியாளர்) அழைத்து, 'வார்னரை பற்றி கவலைப்படாதீர்கள், அவர் தொடர் நாயகனாக இருப்பார்' என்று சொன்னேன். டேவிட் வார்னர் அவ்வளவுதான் முடிந்து விட்டார் என்றெல்லாம் விமர்சகர்கள் எப்படி எழுதினார்கள் என்று தெரியவில்லை. அவர் எல்லா நேரத்திலும் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். மேலும் அவர் ஒரு போராளி'' என்று ஃபின்ச் குறிப்பிட்டார்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3DhrOYj

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்