மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது உயிர்நீத்த விவசாயிகளின் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருடமாக சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்ற வருடம் குளிர்கால கூட்டத்தொடரில் தான் இந்த சட்டங்கள் நிறைவேற்றபட்டன. கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, டெல்லியின் அனைத்து எல்லைகளையும் முற்றுகையிட்டு போராட்டத்தை தொடங்கினார்கள். அந்த போராட்டம் 1 வருடத்தை கடந்து இன்றும் தொடர்கிறது. இத்தகைய சூழலில் பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை ரத்து செய்யப்போவதாக அறிவித்துள்ளார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தொடக்கம் முதலே வேளாண் சட்டங்கள் உழவர் நலனுக்காக கொண்டுவரப்பட்டன என தெரிவித்து வந்த பிரதமர் மோடி, இன்றைய உரையில், சட்டங்களின் நலனை விவசாயிகளுக்கு விளக்குவதில் அரசு தோல்வி அடைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
'எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது. நாங்கள் தோல்வி அடைந்துவிட்டோம். அதனால் தான் இதன் நலனை புரிந்துகொள்ளாமல் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆகவே சட்டங்கள் திரும்ப பெறப்படுகின்றன. நாங்கள் விவசாயிகளின் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம். போராட்டத்தை விவசாயிகள் கைவிட வேண்டும்' என மோடி உரையாற்றியிருக்கிறார்.
அடுத்த வருடம் பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல்களில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் எதிரொலிக்கும் என கூறப்பட்டது. இந்த சட்டங்கள் காரணமாக அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள் பா.ஜ.கவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என அரசியல் ரீதியாகவும் ஒருபார்வை முன்னெடுக்கப்படுகிறது. பஞ்சாப்பில் குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படும் இன்று பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து உத்தரபிரதேசம் செல்லும் மோடி, அங்கே பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பேச இருக்கிறார். அங்கு இது குறித்து பேசுவார் என தெரிகிறது. இதையடுத்து பிரதமரின் இந்த அறிவிப்பின்காரணமாக போராடி வரும் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஜீவக்குமார் பேசுகையில், ''பிரதமரின் அறிவிப்பை உளமார வரவேற்கிறோம். நாட்டின் முதுகெலும்பாக விவசாயம் விளங்குகிறது. இந்த அறிவிப்பால் உளமார மகிழ்கிறோம். சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம். ஏராளமான விவசாயிகள் இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரிழந்துள்ளனர். அவர்களின் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி. குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட சிறிய கோரிக்கைகளைத்தான் விவசாயிகள் முன் வைக்கின்றனர். அதனை அரசு செவி சாய்த்து கேட்க வேண்டும். இந்த வெற்றியை உயிரிழந்த விவாசாயிகளுக்கு சமர்பிக்கிறோம்'' என்றார்.
பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் பேசுகையில், ''குருநானக் ஜெயந்தியன்று வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. போராட்டக்களத்தில் பகுதிவாரியாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கின்றனர். லட்சக்கணக்கில் இருந்த விவசாயிகள் தற்போது ஆயிரக்கணக்கில் களத்தில் உள்ளனர். ஒருவருடம் என்பது உண்மையில் பெரிய காலக்கட்டம். சர்வதேச அளவில் இப்படியொரு போராட்டம் நடந்ததில்லை'' என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nw8Wziமத்திய அரசின் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது உயிர்நீத்த விவசாயிகளின் தியாகத்துக்கு கிடைத்த வெற்றி என்று விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்