Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கிளாஸ்கோ ஐநா பருவநிலை மாற்ற மாநாடு: பிரதமர் மோடியின் கவனம்பெற்ற வாக்குறுதிகள் - ஓர் பார்வை

ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் ஐநா அமைப்பின் பருவநிலை மாற்றம் குறித்த C0P26 மாநாட்டில், 2070-இல் இந்தியா பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை அடையும் என்று இந்தியப் பிரதமர் மோடி அறிவித்தார்.

1995 ஆம் ஆண்டுக்கு பிறகு பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநா உச்சி மாநாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்த மாநாடு நடத்தப்படவில்லை, எனவே இந்த ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 ஆம் தேதிவரை இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோவில் இம்மாநாடு நடைபெற்று வருகிறது.

image

“புவி வெப்பமயமாதலால் உலகுக்கே பேரழிவு” – எச்சரித்த ஐபிசிசி அறிக்கை:

காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி. அமைப்பு தனது புதிய ஆய்வறிக்கையை  ஜெனிவாவில் ஆகஸ்டு மாதம் வெளியிட்டது. Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட இந்த அறிக்கை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் உள்ள அறிவியல் குறித்தும் மனிதர்களால்தான் காலநிலையில் மாற்றங்கள் உண்டாகின்றன என்பதற்கான ஆதாரங்களையும் தெளிவாக எடுத்துரைத்தது.

இந்த அறிக்கை கூறும் முக்கியமான செய்தி என்பது பாரிஸ் ஒப்பந்தத்தின்படி அனைத்து நாடுகளும் தங்களது பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தினாலும் கூட இந்த நூற்றாண்டின் இறுதியில் புவியின் சராசரி வெப்பநிலையானது 3° செல்சியசை தொட்டுவிடும் என்பதே ஆகும். புவி வெப்பமயமாதலானது நீர் சுழற்சியில் ஏற்படுத்தும் தாக்கத்தால் பருவமழைப் பொழிவு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். இதனால் அதி தீவிர மழைப்பொழிவும், வறட்சியும் ஏற்படும். சில இடங்களில் இவ்விரு நிகழ்வுகளும் தொடச்சியாகவோ அல்லது ஒரே நேரத்திலோகூட நிகழும். இதனால் பாதிக்கப்படும் மக்கள் அதிலிருந்து மீளவே முடியாத நிலை உண்டாகும். இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து சில நகரங்கள் மூழ்கும் அபாயமும் ஏற்படலாம் என்றும் இந்த ஆய்வறிக்கை எச்சரித்திருந்தது.

image

இந்த அறிக்கையை தொடந்து, தற்போதைய கிளாஸ்கோ மாநாட்டிற்காக எதிர்பார்ப்புகளும் பொது மக்களிடம் அதிகரித்துள்ளன. இவ்வறிக்கைக்கு பின்னர் 2050 ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டவேண்டும் என்று பல நாடுகளும் உறுதியெடுத்துள்ளன, அப்போதுதான் பேரழிவுகளின் பாதிப்புகளில் இருந்து ஓரளவேனும் காத்துக்கொள்ளலாம் என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் எச்சரித்து வருகின்றனர். எனவே அடுத்த பத்தாண்டுகளில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டங்கள் குறித்து இந்த கிளாஸ்கோ மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது, இதில் 120 உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மோடியின் பஞ்சாமிர்த இலக்குகள்:

கிளாஸ்கோ மாநாட்டில், இந்தியாவின் கார்பன் உமிழ்வு மற்றும் புதைப்படிவ எரிபொருள்கள் பயன்பாட்டை குறைக்கவும், பருவநிலை மாற்ற சிக்கல்களை எதிர்கொள்ளவும் பிரதமர் மோடி “ பஞ்சாமிர்த்” எனப்படும் இந்தியாவின் ஐந்து வாக்குறுதிகளையும் அளித்தார். அதன்படி… 

  1. 2070 ஆம் ஆண்டில் இந்தியா பூஜ்ய அளவு கார்பன் உமிழ்வு இலக்கை அடையும்
  2. 2030 ஆம் ஆண்டில் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 500 ஜிகாவாட்டாக அதிகரிக்கும்.
  3. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்குத் தேவைப்படும் எரிசக்தித் தேவையில் 50 % புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக பெறப்படும்.
  4. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கார்பன் உமிழ்வில் 100 கோடி டன் அளவைக் குறைக்கும்.
  5. 2030-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தில் கார்பனின் சார்பை 45 சதவீதமாக குறையும்.

என்ற மிக முக்கியமான செயல்திட்டங்களை மோடி அறிவித்தார், 2050 ஆம் ஆண்டுக்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வை எட்டுவதற்கான முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொள்ளும் சூழலில், 20 ஆண்டு காலம் கூடுதல் அவகாசத்தை இந்தியா கோரியுள்ளது.

 image

இது தவிரவும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியின் உரையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அவையாவன…

  • இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றம் விவசாயத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடிக்கடி ஏற்படும் புயல், வெள்ளம், அதி தீவிரமழை காரணமாக பயிரிடும் முறைகள் மாறிவிட்டது, இதனால் பெரும் பாதிப்புகளை சந்திக்கிறோம்.
  • உள்ளூர் சூழலுக்கு ஏற்ப வாழ்க்கை முறை அமைத்துக்கொள்ளுதல் பருவநிலையை மேம்படுத்துவதற்காக மாற்றத்தில் முக்கிய தூணாக இருக்கும். அதனால் சூழலுக்குத் தக்க வாழ்வியல் என்ற இயக்கத்தை நாம் தொடங்க வேண்டும்.
  • உலக மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர். ஆனால், உலகில் கரியமில வாயுவை வெளியேற்றுவதில் இந்தியாவின் பங்கு 5 சதவீதமாகவே உள்ளது.
  • பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை சொல்லிலும் செயலிலும் கடைபிடிக்கும் நாடாக இந்தியா விளங்குகிறது.
  • பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வு காண முடியும். நம்முடைய வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் சூழ்நிலைக்கு தக்கபடி இயைந்து திட்டமிடும் பண்பை முக்கிய அம்சமாக கடைப்பிடிக்க வேண்டும்
  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதில் இந்தியா தற்போது 4-ஆவது இடத்தில் இருக்கிறது.
  • கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா தனது புதைபடிவமற்ற எரிசக்தி திறனை 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. இந்தியாவின் எரிசக்தி பங்களிப்பில் அதன் பங்கு 40 சதவீதமாக உள்ளது.
  • குடிநீர் ஆதாரங்கள் முதல் அனைவருக்குமான வீட்டுவசதி திட்டம் வரை அனைத்தும் பருவநிலை மாற்றத்துக்கு தாக்குப்பிடிக்கக் கூடியவையாக மாற்றப்பட வேண்டும்
  • பருவநிலை மாற்றம் தொடர்பான பாடத்திட்டத்தை பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
  • பருவநிலை மாற்றத்தால் பாதிப்பின் அபாயத்தில் இருக்கும் நாடுகளுக்கான உதவிகள் உலகளாவியதாக இருக்க வேண்டும். பேரிடருக்கு தாக்குப்பிடிக்கும் கட்டுமானங்களை இந்தியா உள்ளிட்ட நாடுகள் உருவாக்கும்போது அதற்கு உலகளாவிய உதவிகள் தேவை.
  • பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் 1 டிரில்லியன் டாலர் (75 இலட்சம் கோடி ரூபாய்) நிதியுதவியை வழங்கவேண்டும். இந்த நிதியுதவி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்த அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்த கிளாஸ்கோ மாநாடு 12 ஆம் தேதி நிறைவடையும், அதில் எடுக்கப்படவுள்ள முடிவுகளை உலகநாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். இந்த மாநாட்டில் சீனா அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷ்ய பிரதமர் புதின் மற்றும் பிரேசில், தென் ஆப்ரிக்கா, துருக்கி, மெக்சிகோ உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.

இதனைப்படிக்க...அதி தீவிர மழை, வறட்சி, மீள முடியாத பேரிடர்கள்...- எச்சரிக்கும் ஐபிசிசி அறிக்கை சொல்வதென்ன? 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3bHw9rs

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்