Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

இன்று தென்மண்டல கவுன்சில் கூட்டம் - தமிழகம் சார்பில் பொன்முடி பங்கேற்பு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்து கொள்கிறார்.

நாட்டின் ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் கூறுவதற்காக மண்டல கவுன்சில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், இன்று தென் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் 29ஆவது கூட்டம் திருப்பதியில் நடைபெற உள்ளது.

K. Ponmudy - Wikipedia

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுடன் அந்தமான் நிகோபார், லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், ஆளுநர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சார்பாக இந்த குழுவில் உறுப்பினராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அல்லது கூடுதல் உறுப்பினர்களாக உள்ள அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொள்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3c7P13d

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்