Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பொன்னேரி: வைரஸ் காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு

https://ift.tt/3GCBn5X

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவரது ஏழு வயது மகள் வினோதினி. மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவியான இவருக்கு இரு தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரின் பெற்றோர் அவரை பொன்னேரி தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாணவி மாற்றுப்பட்டிருக்கிறார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனளிக்காமல் போனதால், சிறுமி வினோதினி உயிரிழந்தார்.

image

சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும் வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்ததால், அவர்களும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம், எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உள்ளிட்டோர் அதிகாரிகளுடன் ரெட்டிப்பாளையத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அங்கு சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை செய்து வருகின்றனர். கொசுக்கள் உற்பத்தியைத் தடுக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

தொடர்புடைய செய்தி: தமிழகத்தில் அதிகரித்துவரும் டெங்கு பாதிப்பு - மருத்துவர் ஆலோசனை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்