கன்னியாகுமரியில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், குடியிருப்புகள், கோவில்கள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
குலசேகரம், கோதையார், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது. நான்கு அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், கோதையார், தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து சற்று குறைந்துள்ளது. இருப்பினும், அணைகளிலிருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் பெருக்கெடுத்து, குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மார்த்தாண்டம் அருகே உள்ள வெட்டுவன்னி ஐயப்பன் கோயிலில் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதே போல, தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள கோயில்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
குழித்துறை-அருமணை சாலை, மார்த்தாண்டம்-தேங்காய்பட்டினம் சாலை, புதுக்கடை- நித்திரவிளை சாலை, அருமனை-களியல் சாலை, ஞாரான்விளை- திக்குறிச்சி சாலைகளில் தண்ணீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. திக்குறிச்சி, ஞாரான்விளை, குழித்துறை, சென்னித்தோட்டம், மங்காடு, முஞ்சிறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் சிலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேரேகால்புதூர் பகுதியில் வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவிப்பதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர். தோவாளை அண்ணாநகர் பகுதியில் இரண்டு குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தொடர்புடைய செய்தி: கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கனமழை: குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர்
மேலும் குளச்சல் பகுதியில் உள்ள வெள்ளியாக்குளம் திடீரென உடைந்ததால் அதிலிருந்து தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள சிங்கன்காவு குடியிருப்பு பகுதியில் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், தீயணைப்புத்துறையினர் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அப்போது, மூன்று மாத இரட்டைக் குழந்தைகளுடன், வீட்டில் சிக்கித் தவித்தவர்களை, இடுப்பளவு வெள்ளத்தில் பத்திரமாக அண்டாவில் வைத்து மீட்டனர். தொடர்ந்து வெள்ளம் புகுந்து வருவதால் வீடுகளின் தரைத்தளம் முழுவதும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்