திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனித்தேரோட்டமும், ஆடி மாதம் வரும் பூர நட்சத்திரத்தில் நடைபெறும் ஆடிப்பூர வளைகாப்பு வைபவமும், ஐப்பசி மாதம் பூரம் நட்சத்திரம் அன்று அம்பாளுக்கும், சுவாமிக்கும் நடைபெறும் திருக்கல்யாண திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இந்நிலையில், இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 தினங்கள் தினமும் காலை, மாலை காந்திமதி அம்பாள் அபிஷேகம் கோயில் உள் பிரகார புறப்பாடு நடைபெற்றது. நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சுவாமி அம்பாள் வீதி உலாவாக திருக்கோயில் சென்றனர். இன்று அதிகாலை அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பின்னர், வேதியர்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூர்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்