ரன் மெஷின், சேஸிங் கிங், ஆக்ரோஷமான கேப்டன் என கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
2008-ம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையை வென்று காண்பித்த போது ஒரே நாளில் இந்தியா முழுக்கப் புகழடைந்தார் விராட் கோலி. அதே ஆண்டில் நடந்த இலங்கை சுற்றுப்பயணத்தில் சச்சின் காயமடைந்த பிறகு, 12வது ஆட்டக்காரராக இருந்த கோலி முதல்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். அந்த போட்டியில் அவர் எடுத்தது 12 ரன்கள்தான். ஆனால், அதன்பின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி ஒரு தலைசிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்தது தனிக்கதை.
2012-இல் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 4 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் மூத்த வீரர் வீரேந்திர சேவாக்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இளம் வீரராக இருந்த விராட் கோலிக்கு துணைக் கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது. 2014-இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் தற்காலிக கேப்டனாக செயல்பட்டிருந்த கோலி, 2015-ஆம் ஆண்டு முதல் முழுநேர கேப்டனாக செயல்படுகிறார்.
2017-ஆம் ஆண்டு மகேந்திரசிங் தோனி, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்து, கோலி வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சி பொறுப்பையும் ஏற்றார். 2017 முதல் 3 விதமான இந்திய அணிகளின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியுடன், இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். நடந்து முடிந்த 2021 ஐபிஎல் சீசனுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விடைபெற்றார் விராட் கோலி.
தற்போது நடந்துவரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பு ஊசலாடிக் கொண்டிருக்க, கேப்டன் என்ற முறையில் பல்வேறு விமர்சனங்களையும் அழுத்தங்களையும் எதிர்கொண்டு வருகிறார் விராட் கோலி. எனினும் இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் கோலி நிகழ்த்திய சாதனைகளை அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. அவற்றில் முக்கியமான 3 சாதனைகள் இங்கே..
இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன்
இந்திய கிரிக்கெட்டில் அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்த கேப்டன்கள் வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கோலிதான். அவர் தலைமையில் விளையாடிய 65 போட்டிகளில், இந்தியா 38 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 11 போட்டிகள் ‘டிரா’ ஆகியுள்ளன. அவருக்கு அடுத்த இடங்களில்தான் தோனி, கங்குலி, அசாருதீன் உள்ளனர். வெளிநாடுகளில் அதிக டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட இந்திய கேப்டன்களின் வரிசையிலும் கோலியே முதலிடம் வகிக்கிறார். மேலும் இங்கிலாந்தில் 3 டெஸ்ட் வெற்றிகளைக் கண்ட முதல் இந்திய கேப்டன் என்கிற சாதனையும் விராட் கோலி வசமே இருக்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன்
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2018/2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முதலில் டெஸ்ட் தொடரை வென்ற ஆசிய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். இதுவரை ஆசிய அணிகள் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம்) 29 கேப்டன் தலைமையில் ஆஸ்திரேலியா சென்று விளையாடியுள்ளது. இதில் விராட் கோலி மட்டுமே தொடரை கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளார்.
ரன் வேட்டைக்காரன்
ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை விரைவாகக் கடந்த வீரர்; ஒருநாள் கேப்டனாக 5,000 ரன்களை விரைவாகக் கடந்த வீரர்; 20,000 சர்வதேச ரன்களை விரைவாகக் கடந்த வீரர் என பல ‘ரிக்கார்டுகள்’ கோலி வசமிருக்கிறது. 96 டெஸ்ட் போட்டிகளில் 7,765 ரன்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 12,169 ரன்களையும், 92 டி20 போட்டிகளில் 3225 ரன்களையும் குவித்துள்ளார் . சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 70 சதங்கள் மற்றும் 118 அரை சதங்களை இவர் விளாசியுள்ளார். டி-20 உலகக் கோப்பை வரலாற்றில் 2 முறை தொடர் நாயகன் விருது வென்ற ஒரே வீரர் விராட் கோலி தான். 2014, 2016 என கடைசி 2 உலகக் கோப்பைகளிலும் அவர்தான் தொடர் நாயகன்.
இதையும் படிக்க: குறையாத ரஜினியின் மாஸ்.. அண்ணன் தங்கை பாசம் - எப்படியிருக்கிறது அண்ணாத்த?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3GQccgpரன் மெஷின், சேஸிங் கிங், ஆக்ரோஷமான கேப்டன் என கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்