தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, வடிகால்களை தூர்வாருவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு துரிதமாக ஈடுபடவில்லை என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரதிய ஜனதா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பை கண்டறியவே தான் படகில் சென்றதாகவும், அது தொடர்பான விமர்சனங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்றும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3c9Zbjzதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக, வடிகால்களை தூர்வாருவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு துரிதமாக ஈடுபடவில்லை என தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரதிய ஜனதா சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் கொளத்தூர் தொகுதியில் பாதிப்பை கண்டறியவே தான் படகில் சென்றதாகவும், அது தொடர்பான விமர்சனங்கள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்றும் கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்