இந்தியாவின் வளர்ச்சியில் தென்னிந்திய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண்பது, நல்லிணக்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக மண்டல அளவிலான முதலமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் மூத்த அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி முதல்வர்களும் லட்சத்தீவு, அந்தமான் ஆகிய மத்திய ஆட்சிப் பகுதி நிர்வாகிகளும் பங்கேற்றனர். தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான 51 பிரச்னைகளில் 40 பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் பங்களிப்பில்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தின் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3DiYjVYஇந்தியாவின் வளர்ச்சியில் தென்னிந்திய மாநிலங்கள் முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் பிரச்னைகள் உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண்பது, நல்லிணக்கம் ஏற்படுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுக்காக மண்டல அளவிலான முதலமைச்சர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் மூத்த அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர். ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி முதல்வர்களும் லட்சத்தீவு, அந்தமான் ஆகிய மத்திய ஆட்சிப் பகுதி நிர்வாகிகளும் பங்கேற்றனர். தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கவில்லை. தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
சுமார் 4 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில், மாநிலங்களுக்கு இடையேயான 51 பிரச்னைகளில் 40 பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் பங்களிப்பில்லாமல் இந்தியாவின் வளர்ச்சியை நினைத்துக்கூட பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். தமிழகத்தின் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்