Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாலியல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை - ஆசிரியர் கைது

கோவை மாவட்டத்தில் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கில், தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஆறு மாதங்களுக்கு முன்பாக தனியார் பள்ளியில் இருந்து மாற்றுச்சான்றிதழ் பெற்றார். வேறு பள்ளியில் சேர்க்க பெற்றோர் முயன்று வந்த நிலையில், வியாழனன்று மாலையில் வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பயின்று வந்த பள்ளியில் மிதுன் சக்கரவர்த்தி என்ற ஆசிரியர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவரிடமிருந்து தப்பவே பள்ளியில் இருந்து விலகியதாகவும், இருப்பினும் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாகவும் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மாணவியின் தந்தை புகார் அளித்தார்.

image

இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், மாணவி படித்த பள்ளிக்கு சென்று சில மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. பின்னர், புகாருக்கு உள்ளான பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் தொல்லை அளித்தல் ஆகிய இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை காவல்துறையினர் கைது செய்து, உடல் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அதன் பிறகு நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சம்பவம் குறித்து பள்ளி தலைமையாசிரியையிடம் கேட்டபோது, மாணவி கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் குடும்பத்தோடு மதுரைக்கு இடம்பெயர இருப்பதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டதாகவும், இரு நாட்களில், அவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து விட்டதாகவும் தெரிவித்தார். அதற்கு பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்றும், பள்ளி தாளாளரிடம் பேசாமல் எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் தலைமை ஆசிரியை தெரிவித்தார். இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின்பேரில், மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை மேற்கொண்டார். இதற்கு மத்தியில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் பள்ளியின் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது.

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3naJEGD

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்