இரிடியத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தருவதாகக் கூறி தொழில் அதிபரை மோசடி செய்த விவகாரத்தில் ஒருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
நடிகர் அம்ரீஷ் மற்றும் சிலர் இரிடியத்தை அதிக லாபத்துக்கு விற்று தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நெடுமாறன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதிமுக பிரமுகரும், தொழில் அதிபரான நெடுமாறன், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார்.
இந்நிலையில், தன்னிடம் அரியவகை இரிடியம் உள்ளதாகவும், இதை மலேஷியாவில் உள்ள நிறுவனம் 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க தயாராக உள்ளதாக அம்ரீஷ் ஆசைவார்த்தை காட்டியதாக தெரிவித்தார். பெரம்பலூரில் உள்ள தலைக்கட்டுகளான முக்கிய நபர்களுக்கும் மலேசியாவில் கொண்டு செல்வதற்கும் 100 கோடி ரூபாய் செலவு செய்தால், இரிடியத்தை மலேசியாவில் விற்பனை செய்துவிடலாம் என ஆசை வார்த்தை காட்டி உள்ளார்.
இதை நம்பி முதற்கட்டமாக தன்னிடமிருந்த 26.20 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதன் பின் நெடுமாறன், தன் கையில் கிடைத்த இரிடியத்தை பார்சலில் மலேசியாவிற்கு அனுப்பிய பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் மலேஷிய நிறுவனத்திடம் இருந்து பணம் வராததால் அதிர்ச்சி அடைந்த அம்ரீஷிடம் கேட்டுள்ளார். கொரோனா காலத்திற்கு முன்பாக திடீரென தன் வீட்டிற்கு வந்த அம்ரீஷ் தான் ஏமாற்றப்பட்டதாகக் கூறி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக தெரிவித்தார்.
இதனையடுத்து பணத்தை 1 வருடமாகியும் திருப்பித்தராததால் நடிகையின் மகனை நம்பி, கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்ததாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த மார்ச் 16 ஆம் தேதி நடிகர் அம்ரிஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், தரகராக செயல்பட்ட சாலிகிராமத்தைச் சேர்ந்த பாபு என்கிற கபாலி பாபுவை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த இரிடியம் மோசடியின் பின்னால் இருக்கும் கும்பலைச் சேர்ந்த மற்றவர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்