இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்து படுதோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.
“இது நம் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. இது மாதிரியான நாட்கள் சில சமயங்களில் அமைவதுண்டு. நாம் என்ன தான் முயன்றாலும், எதற்குமே பலன் கிடைக்காது. அது மாதிரியான ஒரு நாள் தான் இந்தியாவுக்கு இந்த போட்டி அமைந்துவிட்டது. இதை தவிர இதில் பேச வேறு ஒன்றும் இல்லை.
வரும் நாட்களில் நமது அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
நியூசிலாந்து அணி பவுலிங்கில் செலுத்திய உத்வேகத்தை இந்தியா செலுத்த தவறி விட்டதாக நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் தனது பவுலர்களை ரொட்டேட் செய்தார். 6 முதல் 10 ஓவர்களில் இந்தியா வெறும் 13 ரன்களை தான் எடுத்தது. ஒரு விக்கெட்டையும் இழந்திருந்தது இந்த ஓவர்களில் தான் இந்தியா ஆட்டத்தை இழந்ததாகவும் நான் பார்க்கிறேன். ஒற்றை இலக்க ரன்களை கூட எடுக்க முடியாத சூழலில் தான் பெரிய ஷாட் ஆட முயன்று நமது பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர்” என சச்சின் சொல்லியுள்ளார்.
இதையும் படிக்கலாம் : இந்தியா படுதோல்வி : ட்விட்டரில் எதிரொலிக்கும் Ban IPL முழக்கம்! அது தான் காரணமா? ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3nO1KNJஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அடைந்து படுதோல்வி குறித்து மனம் திறந்துள்ளார்.
“இது நம் இந்திய அணிக்கு மிகவும் கடினமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. இது மாதிரியான நாட்கள் சில சமயங்களில் அமைவதுண்டு. நாம் என்ன தான் முயன்றாலும், எதற்குமே பலன் கிடைக்காது. அது மாதிரியான ஒரு நாள் தான் இந்தியாவுக்கு இந்த போட்டி அமைந்துவிட்டது. இதை தவிர இதில் பேச வேறு ஒன்றும் இல்லை.
வரும் நாட்களில் நமது அணி தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
நியூசிலாந்து அணி பவுலிங்கில் செலுத்திய உத்வேகத்தை இந்தியா செலுத்த தவறி விட்டதாக நான் பார்க்கிறேன். அதே நேரத்தில் நியூசிலாந்து அணியின் கேப்டன், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் தனது பவுலர்களை ரொட்டேட் செய்தார். 6 முதல் 10 ஓவர்களில் இந்தியா வெறும் 13 ரன்களை தான் எடுத்தது. ஒரு விக்கெட்டையும் இழந்திருந்தது இந்த ஓவர்களில் தான் இந்தியா ஆட்டத்தை இழந்ததாகவும் நான் பார்க்கிறேன். ஒற்றை இலக்க ரன்களை கூட எடுக்க முடியாத சூழலில் தான் பெரிய ஷாட் ஆட முயன்று நமது பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர்” என சச்சின் சொல்லியுள்ளார்.
இதையும் படிக்கலாம் : இந்தியா படுதோல்வி : ட்விட்டரில் எதிரொலிக்கும் Ban IPL முழக்கம்! அது தான் காரணமா? ஓர் அலசல்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்