'அவசர கால நிதி' என்பதை எப்போதும் வைத்திருப்பது அவசியம். அதுவும் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அவசர கால நிதி அதிக முக்கியத்துவம் பெருகிறது. திடீரென மருத்துவ செலவுகள் ஏற்படலாம், வேலை இழப்பு உருவாகலாம், கார் - இரு சக்கர வாகனத்தில் பழுது ஏற்படலாம்... இதுபோல உடனடியாக செய்தாக, திட்டமிடாத செலவுகளுக்கு நிதி தேவைப்படும். இதற்கான நிதியை 'அவசர கால நிதி' என்று கூறுகிறோம்.
எவ்வளவு தேவை? - பொதுவாக ஆறு மாத சம்பளத்தை அவசர கால நிதியாக வைத்திருக்க வேண்டும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. உதாரணத்துக்கு ரூ.50,000 சம்பளம் (6 மாத செலவுகள் + இஎம்ஐ )என்றால் குறைந்தபட்சம் 3 லட்ச ரூபாய் அளவுக்கு இந்த நிதி இருக்க வேண்டும்.
இயல்பாக நால்வர் இருக்கும் குடும்பம் என்றால், இந்த தொகை போதுமானதாக இருக்கும். ஒருவேளை பெரிய குடும்பம், ஒருவர் மட்டுமே வருமானம் ஈட்டுகிறார் என்னும் பட்சத்தில் 9 முதல் 12 மாதங்கள் வரை அவசர கால நிதி இருக்க வேண்டும். விபத்து, வேலை இழப்பு உள்ளிட்ட எதேனும் காரணங்களால் வருமானம் பாதிக்கப்பட்டால் குடும்பத்தில் இயல்பு நிலை பாதிக்கக் கூடாது.
மருத்துவ தேவைக்கு காப்பீடு இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால், சிலசமயங்களில் சில மருத்துவ சிகிச்சைக்கு காப்பீடு கிடைக்காது. 24 மணி நேரம் அனுமதி தேவைப்படாத, அதேசமயம் கூடுதல் செலவு ஆகலாம். சிறு விபத்து ஏற்பட்டால் அனுமதி தேவைப்படாது, ஆனால் சில ஆயிரங்கள் காலி ஆகலாம். அதனால், மருத்துவக் காப்பீடு இருக்கிறதே என்பதற்காக அவசர கால நிதியில் அலட்சியம் வேண்டாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் கூட முழுமையான க்ளைம் கிடைக்காமல் போகலாம். காப்பீட்டு நிறுவனங்கள் விதிகளுக்கு ஏற்பவே க்ளைம் கொடுப்பார்கள். ஆனால், சிலசமயங்களில் அந்த மருத்துவமனையில் இருக்கும் வசதியை பயன்படுத்த வேண்டி இருக்கலாம்.
ரொக்கம்: இந்தப் பணத்தை தனியாக ஒரு கணக்கில் வைத்திருப்பது நல்லது. இந்த தொகை மூலம் வருமானம் கிடைக்க வேண்டும் என்பது நோக்கமல்ல. செலவுகளுக்கு உடனடியாக பணம் கிடைக்க வேண்டும் என்பதே பிரதானம். சில வங்கிகளில் ஃபிளக்ஸி கணக்குகள் உள்ளன. குறிப்பிட்ட தொகைக்கு மேல் அதிகமாக இருக்கும்போது ஃபிக்ஸட் டெபாசிட்டாக மாறிவிடும். அதேசமயம் அந்தத் தொகையை உடனடியாக எடுத்துக்கொள்ளவும் முடியும்.
அதேபோல இதர தேவைகளுக்காக செய்துள்ள முதலீட்டையும், அவசர கால நிதியையும் குழப்பிக் கொள்ளாதீர்கள். இதுதவிர குறுகிய கால டெபாசிட், லிக்விட் பண்ட்கள் என பல விதமான வாய்ப்புகள் உள்ளன. பணத்தை உடனடியாக எடுக்க வேண்டும் என்பது மட்டுமே பிரதானம்.
ஃபிக்ஸட் டெபாசிட்களிலே கூடுதல் வட்டி தரும் திட்டங்கள் உள்ளன. ஆனால், அதுபோன்ற திட்டங்களைவிட தரமான முதல் தர திட்டங்களில் முதலீடு செய்வதே நல்லது. சமயங்களில் ரிசர்வ் வங்கி பணம் எடுப்பதற்கு தடை விதிக்கலாம், கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் பணம் எடுக்க செபி தடை விதிக்கலாம் என்பதால் தரமான திட்டங்களில் வைத்திருக்கவும்.
அதேபோல அவசர கால நிதியை ஒரே இடத்தில் வைத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. சிறிது ரொக்கமாக வைத்திருக்கலாம், சிறிது சேமிப்புக் கணக்கில் வைத்திருக்கலாம், சிறிய தொகையை லிக்விட் பண்ட்களில் வைத்திருக்கலாம். இதுபோல பல இடங்களில் வைத்திருப்பதன் மூலம் அவசர கால தேவையை சமாளிக்கலாம்.
புதிய திட்டங்கள்: அவசர கால நிதி இருக்கும் பட்சத்தில் தேவைகளுக்கு மட்டுமல்லாமல் புதிய திட்டங்களையும் செயல்படுத்த முடியும். ஓர் ஆண்டு செலவுக்கு தேவையான தொகை இருக்கும் பட்சத்தில் புதிதாக தொழில் தொடங்கலாம், வேலையில் இருந்து விலகி தகுதியை உயர்த்திகொள்வதற்கு படிக்கலாம். அவசர கால நிதியை அவசரத்துக்கு மட்டுமல்லாமல், புதிய முயற்சியை எடுப்பதற்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அவசர கால நிதி - சில குறிப்புகள்:
* அவசர கால நிதி இருக்கிறது என்பதால் மருத்துவக் காப்பீடு தேவையில்லை என புரிந்துகொள்ள வேண்டாம்.
* கிரெடிட் கார்டு இருக்கிறது, உடனடியாக பர்சனல் லோன் கிடைக்கிறது என்னும் அலட்சியம் வேண்டாம்.
* இதைவிட முக்கியம், அவசர கால நிதி எங்கு இருக்கிறது என்பதை குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்திருப்பது அவசியம். இந்த நிதியை மறைத்து வைத்திருப்பதால் எந்தப் பயனும் இல்லை.
* அவசர கால நிதி இல்லை எனில், இலக்கு நிர்ணயம் செய்து உருவாக்க வேண்டியது அவசியம்.
* பங்குச்சந்தை அல்லது பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் இந்த அவசர கால நிதியை வைத்திருக்க வேண்டாம்.
> முந்தைய அத்தியாயம்: பணம் பண்ண ப்ளான் B - 7: நடுத்தர வர்க்கத்தினருக்கு ரியல் எஸ்டேட் முதலீடு அவசியம்... ஏன்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்