Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ஸ்டார்ட் அப் இளவரசிகள் 9: மார்த்தா லேன் ஃபாக்ஸ் - இணையத்தை 'அறிந்த' அசாத்திய தூதர்!

மார்த்தா லேன் ஃபாக்ஸ் (Martha Lane Fox) டாட் காம் யுகத்தின் முகமாக திகழ்ந்தவர். டாட் காம் அலை வீசிய காலத்தில் இணையம் எங்கும் அவர் முகம்தான் தெரிந்தது. டாட் காம் வெற்றிக்கதைகளின் அடையாளங்களில் ஒன்றாக அவரது பெயர் அறியப்பட்ட நிலையில், புகழின் சிகரத்தில் இருந்து சறுக்கும் நிலையும் அவருக்கு உண்டானது. இதற்கு காரணமான டாட் காம் குமிழ் சரிவை அவர் தாக்குப்பிடித்து மீண்டு வந்ததோடு, அதன் பின் தனி வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் சோதனையில் இருந்தும் மீண்டு வந்திருக்கிறார்.

image

முதல் வர்த்தக வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்து இணைய நிறுவனங்களை உருவாக்கவில்லை என்றாலும், மார்த்தா லேன் ஃபாக்ஸ் இணைய உலகில் மறக்கப்படாமல் இருக்க முக்கிய காரணம், அவர் இணையத்தின் புகழ்பாடுபவராக இருப்பதுதான். ஆம், மார்த்தா இணையத்தை அறிந்தவராக இருப்பதே அவரது பலமாக ஆற்றலாக இருக்கிறது.

இணையத்தை அறிந்தவர் என்று சொல்லும்போது, இதில் என்ன இருக்கிறது என கேட்கத் தோன்றலாம். இணையத்தின் ஆற்றலை அதன் ஆரம்ப காலத்திலேயே உணர்ந்தவர்களில் ஒருவராக மார்த்தா இருந்தார் என்பது மட்டும் அல்ல, இணையம் எல்லோருக்குமானதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தார். இந்த நம்பிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலேயே அவரது வாழ்க்கை அமைந்திருக்கிறது. இதன் காரணமாகவே அவர் டிஜிட்டல் சாம்பியனாக கொண்டாடப்படுகிறார்.

இதனிடையே, அவர் பிரிட்டனில் மக்கள் பிரதிநிதியாகவும் இருந்திருக்கிறார். இணையத்தை பரவலாக்கும் அரசு முயற்சியிலும் நெருக்கமான பங்கு வகித்திருக்கிறார். தற்போது டாட் எவ்ரிஒன் (doteveryone) எனும் அமைப்பின் மூலம் இணையத்தை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு செல்லும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

image

இணைய தூதராக செயல்படும் மார்த்தாவின் வாழ்க்கை பயணம் இவ்விதம் தொடர்வதை பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், இணையத்தையே எப்போதும் முதன்மையாக கருதி வந்திருக்கிறார் எனும்போது இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. அவருக்கு பெரும் செல்வத்தையும், அதைவிட அதிக பணத்தையும் பெற்றுத் தந்த லாஸ்ட்மினிட்.காம் நிறுவனத்தின் வெற்றியை விட அதற்கு அடிநாதமாக இருந்த இணையத்தின் வெற்றியை முக்கியமாக கருதி செயல்பட்டதாக பேட்டி ஒன்றில் மார்த்தா தெரிவித்த கருத்தில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். இணையத்தை பயன்படுத்தாவிட்டால் ஒருவர் பொறுப்பான குடிமகனாக இருக்க முடியாது என பிபிசி பேட்டியில் ஒரு முறை கூறியிருப்பதையும் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.

வாழ்க்கையை மாற்றிய அனுபவம்: மார்த்தாவின் வாழ்க்கையிலும் இணையத்தின் அறிமுகமே திருப்பு முனையாக அமைந்தது. 1973-ம் ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த மார்த்தாவின் தந்தை ஒரு கல்வியாளர் என்றால், தாய் ஒரு தொழில்முனைவோராக இருந்தார். பெற்றோர் கட்டுப்பாடு இல்லாத அன்பையும், மேலும் உயர வேண்டும் எனும் எண்ணத்தை உண்டாக்கும் சவால்களையும் அளித்து வளர்த்ததால் நம்பிக்கையோடு வளர்ந்ததாக இளம் பருவம் பற்றி மார்த்தா கூறியிருக்கிறார். "எந்த எண்ணமும் உங்களால் அடைய முடியாது இல்லை, எந்த அறையும் நீங்கள் நுழைய முடியாதது இல்லை எனும் நம்பிக்கையை பெற்றதே பின்னாளில் ஒரு பெண்ணாக தான் பெற்ற வெற்றிக்கு அடித்தளம்" என்றும் கூறியிருக்கிறார்.

ஆக்ஸ்போர்டு உயர் நிலை பள்ளியில் படித்தவர், பின்னர் மேக்டலேன் கல்லூரியில் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றார். வரலாற்றில் ஆர்வம் கொண்டிருந்தாலும், அறிவியல் பாடத்தை அடிப்படையாக கொண்டு படித்திருக்கலாம் என்று எண்ணம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். வரலாறு பாடத்தை எடுத்து படித்ததால் கம்ப்யூட்டர், கோடிங் போன்றவற்றில் அவருக்கு பரிச்சயம் இருக்கவில்லை என்றாலும், பணி நிமித்தமாக இணையத்தை அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது அவரது வாழ்க்கையையே மாற்றும் அனுபவமாக அமைந்தது.

கல்லூரிப் படிப்பை முடித்ததும் மார்த்தா தொலைத்தொடர்பு ஆலோசனை நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். ஸ்பெக்ட்ரம் எனும் அந்த நிறுவனம், அப்போது பிரபலமாகி கொண்டிருந்த இணையம் பற்றி அறிக்கை ஒன்றை உருவாக்கத் தருமாறு கேட்டது. 1991-ம் ஆண்டில் இந்த அறிக்கையை அவர் தயார் செய்தார். இணையம் என்றால் என்ன? (What is the Internet?) எனும் பொருளில் அமைந்திருந்த அந்த அறிக்கைக்காக தகவல்களை சேகரித்தபோது தான் மார்த்தாவும் இணையம் என்றால் என்ன என்றும் அறிந்து கொண்டார்.

image

இணையம் அந்த காலகட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் அதிகம் அறிமுகமாகவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்த இணையம் தொழில்நுட்ப ஆர்வலர்கள், வர்த்தகர்கள் மத்தியில் பிரபலமாகத் துவங்கிய சூழலில், இணையம் என்றால் என்ன எனும் கேள்விக்கு விடை தேடிய மார்த்தா, இதற்கு பதிலாக விரிந்த இணையத்தை கண்டு வியந்து போனார்.

"இது எனக்கு தொழில்நுட்பம், வேகமாக மாறிவரும் தொலைத்தொடர்பு மற்றும் மீடியா உலகம் பற்றி புரிய வைத்தது. உலகம் முன்னேறிக் கொண்டிருக்கும் திசை பற்றிய எனது பார்வையையும் இது பெருமளவு மாற்றியது" என இந்த அறிக்கை தயார் செய்த அனுபவம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார். இதே காலகட்டத்தில் தனது தந்தைக்கு இணையத்தை அறிமுகம் செய்து வைக்கும் செயலிலும் ஈடுபட்டார்.

ஒரு கிளைக்கதை: ஸ்பெக்டரம் நிறுவனத்தில் பணியில் இருந்தபோது இணையம் அறிமுகம் ஆனது போல, இணையத்தின் ஆற்றலை பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்த பிரெண்ட் ஹாபர்மேனும் (Brent Hoberman) அறிமுகமானார். ஹாபர்மேன் தான், டாட் காம் யுகத்தின் வெற்றிக்கதைகளில் ஒன்றான லாஸ்ட்மினிட்.காம் நிறுவனத்தை உருவாக்கியவர்.

இங்கு கிளைக்கதையாக ஹாபர்மேனின் வாழ்க்கை கதையும் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம். ஹாபர்மேன் தென்னாப்பிரிக்காவில் பிறந்து வளர்ந்து பின்னர் பிரிட்டனில் குடியேறியவர். இதனிடையே, அமெரிக்காவில் வசித்திருக்கிறார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோதே, கால்பந்து குழு ஒன்றை நிர்வகிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இந்த அனுபவத்தை மீறி வர்த்தக உலகில் நுழைய வேண்டும் என அவர் நினைக்கவில்லை. வங்கியாளர் அல்லது ஆலோசகராக வேண்டும் என விரும்பியவர் ஆலோசனை நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குள் இந்தப் பணியை இழக்க நேர்ந்த நிலையில், இரண்டாவதாக அவர் ஸ்பெக்ட்ரம் நிறுவனத்தில் ஆலோசகராக சேர்ந்தார். இந்த காலகட்டத்தில்தான் அவர் இணையத்தையும் அறிமுகம் செய்துகொண்டார். இணையம் மூலம் பொருட்களை வாங்க வழி செய்த இ-காமர்ஸ் அவரை பெரிதும் கவர்ந்தது.

ஆனால், இணையத்தில் அவர் எதையும் வாங்கவில்லை. இணையம் மூலம் தான் எதை வாங்க விரும்புவேன் என யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் அவருக்கு அந்த எண்ணம் உண்டானது. எல்லாவற்றையும் கடைசி நிமிடத்தில் தீர்மானித்து வாங்கிக்கொள்ளலாம் எனும் எண்ணம்!

வெளியூர் செல்வதாக இருந்தாலும் சரி, ஓட்டலில் தங்குவதாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் கடைசி நிமிடத்தில் இணையத்தில் வாங்குவதற்கான வாய்ப்பு நன்றாக இருக்கும் என நினைத்தார். இந்த எண்ணம், சாகசத்தையும், புதிய அனுபவங்களையும் விரும்புகிறவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என நம்பினார். இந்த எண்ணத்தை அடிப்படையாக கொண்டு நிறுவனத்தை துவக்க விரும்பியவர் அதற்கான அனுபவமும், நிர்வாகத்திறனும் தன்னிடம் இல்லை என நினைத்ததால், தனக்கு அறிமுகம் ஆகியிருந்த மார்த்தாவை தன்னுடன் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார்.

இப்படி இருவரும் சேர்ந்து துவக்கிய லாஸ்ட்மினிட்.காம் 1998-ல் அறிமுகமானது. இணையம் மூலம் பயண டிக்கெட் முன்பதிவு செய்வது, பொருட்களை வாங்குவது போன்ற வசதிகள் எல்லாம் அறிமுகமாகி, இவை தொடர்பான இணைய நிறுவனங்களும் உருவாகியிருந்த நிலையில், விமான டிக்கெட், ஓட்டல் பதிவு உள்ளிட்ட விடுமுறை வசதிகளை கடைசி நிமிடத்தில் மேற்கொள்ள வழி செய்யும் நிறுவனமாக லாஸ்ட்மினிட்.காம் உதயமானது.

எப்போதுமே தள்ளுபடிக்கும், விலைக் குறைப்பிற்கும் தனி ஈர்ப்பு இருக்கத்தானே செய்கிறது. அதைத்தான் லாஸ்ட்மினிட் அருமையாக பயன்படுத்திக்கொண்டது. பயணங்களை திட்டமிடுபவர்கள் முன்கூட்டியே பதிவு செய்யும்போது, முழு கட்டணம் அல்லது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கலாம். தள்ளுபடிக்கு காத்திருந்தால், நல்ல அறை கிடைக்குமா என்பது உறுதியாக தெரியாது.

image

லாஸ்ட்மினிட் இந்த நிலையை மாற்றிக்காட்டியது. இந்த தளத்தை பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்யும்போது, கடைசி நேரத்தில் காலியாக இருக்கும் ஓட்டல் அறைகள் குறைந்த கட்டணத்தில் கிடைத்தன. ஆக, வாடிக்கையாளர்கள், நட்சத்திர ஓட்டல் அறைகளில் கூட சாதாரண கட்டணத்தில் தங்கும் வாய்ப்பை பெறலாம். ஒரே நிபந்தனை: பதிவு செய்யும்போதே கிரெடிட் கார்டு விவரத்தை அளித்து பணம் பிடித்தம் செய்ய வழி செய்ய வேண்டும்.

இந்த கடைசி நேர சலுகை வாய்ப்பு இணையம் சாத்தியமாக்கிய அருமையான எண்ணங்களில் ஒன்றாக லாஸ்ட்மினிட் நிறுவனத்தை பிரபலமாக்கி டாட் காம் வெற்றிக்கதையாகவும் உருவாக்கியது. ஆனால், இந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடவில்லை. இதை அடைய நிறுவனம் பெரும் சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இவற்றை எதிர்கொண்டு நிறுவனத்தை வளர்த்தெடுத்ததில்தான் மார்த்தாவின் பங்களிப்பும் சாதனையும் இருக்கிறது.

மார்த்தா கல்லூரி காலத்திலேயே தொழில்முனைவில் ஆர்வம் கொண்டிருந்தார். டேட்டிங் சேவை ஒன்றையும் நடத்திப் பார்த்திருக்கிறார். அதோடு, எதுவும் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டிருந்தார். எனவே, ஹாபர்மேன் 'லாஸ்ட்மினிட்' நிறுவனத்திற்கான எண்ணத்தை விவரித்ததுமே, இணையத்தின் ஆற்றலால் இதை எங்கெல்லாமோ கொண்டு செல்லலாம் என நினைத்தவர், இணை நிறுவனராக சம்மதம் தெரிவித்து உற்சாகமாக களத்தில் இறங்கினார்.

'லேடி, காம்' எனும் தலைப்பில் மார்த்தாவை அறிமுகம் செய்யும் கார்டியன் இதழ் கட்டுரை ஒன்று வேகத்தையும், சுறுசுறுப்பையும், அவரது தனிச்சிறப்பாக வர்ணிக்கிறது. லாஸ்ட்மினிட் நிறுவனத்தை வளர்த்தெடுப்பதில் இந்தப் பண்புகளை அவர் முழுவீச்சில் வெளிப்படுத்தினார். லாஸ்மினிட்டின் எண்ணம் சிறப்பாக இருந்தாலும், ஓட்டல்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதை ஏற்பதில் தயக்கம் காட்டிய நிலையில், அவர் பம்பரமாக சுழன்று வர்த்தகர்களை சந்தித்து இந்த எண்ணத்தை ஏற்க பாடுபட்டார். இன்னொரு பக்கம் முதலீட்டாளர்களை சந்தித்து தங்கள் நிறுவனத்தில் நிதி அளிக்க வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்கள் மத்தியில் அவர் பேசுவதை பார்க்கும்போது அத்தனை துடிப்புடன் இருக்கும் என்கிறார் ஹாபர்மேன். ஒருமுறை முதலீட்டாளர்கள் மத்தியில் பேசியபோது, "நீங்கள் எல்லாம் நிதி தொழில்முனைவோர், எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள்" என உற்சாகமாக கூறி, அவர்களுக்கும் அந்த உற்சாகத்தை கடத்தியிருக்கிறார். மார்த்தாவின் முயற்சி நிறுவனத்திற்கு முதலீட்டை பெற்றுத் தந்தோடு, அதன் வளர்ச்சிக்கும் உதவியது. அதோடு, நிறுவனத்தின் முகமாகவும் அவர் அறிமுகமானார்.

தாக்குதல்களும் அசராத துடிப்பும்: மார்த்தாவுக்கு அப்போது 25 வயது. அழகாகவும், இளமையாகவும் இருந்தவர் சுறுசுறுப்பாக செயல்பட்டு இணைய நிறுவனம் ஒன்றை முன்னுக்கு கொண்டு வந்த விதம் அனைவரையும் கவர்ந்தது. டாட் காம் நிறுவனங்கள் அடுத்தடுத்த வெற்றி பெற்றிக்கொண்டிருந்த நிலையில், லாஸ்ட்மினிட் நிறுவனமும் கவனத்தை ஈர்த்தது. அதன் அடையாளமாக மார்த்தா பார்க்கப்பட்டார். டாட் காம் வளர்ச்சிக்கான உதாரணமாகவும் அவர் கருதப்பட்டார்.

image

லாஸ்ட்மினிட் பங்குச்சந்தையிலும் நுழைந்து பெரும் வெற்றி பெற்று அதன் நிறுவனர்களை கோடீஸ்வரர்களாக்கியது. அதன் பிறகு நிறுவன பங்குகள் சரிந்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானாலும், நிறுவனம் தாக்குப் பிடித்து நின்று பின்னர் வேறு பெரிய நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது.

லாஸ்ட்மினிட் பங்குகள் சரிந்தபோது மார்த்தாவும் விமர்சனம் மற்றும் தாக்குதல்களுக்கு இலக்கானாலும் அவர் அசரவில்லை. அதற்கு முக்கியக் காரணம் இணையத்தின் மீது அவருக்கு இருந்த நம்பிக்கைதான். சவால்களுக்கு மத்தியில் லாஸ்ட்மினிட் நிறுவனத்தை உருவாக்கி கொண்டிருந்தபோது, இணையத்தின் சாத்தியத்தை உணர்த்துவதற்கான வாய்ப்பாக கருதியே இந்த சவால்களுக்கான தீர்வுகளை துரத்திச் சென்றார். இந்த வேட்கையே வெற்றியையும் தேடித் தந்தது.

எனவே, கால சுழற்சியில் லாஸ்ட்மினிட் நிறுவனத்தில் இருந்து வெளியேற நேர்ந்தாலும், அதன் மூலம் கிடைத்த செல்வத்தில் திளைத்திருப்பதில் வாழ்க்கையை கழிக்காமல், இணையத்தை எல்லோருக்கும் கொண்டு செல்வதை இலக்காக கொண்டு செயல்பட்டார். இதுவே அவருக்கு பிரிட்டன் மக்களவை உறுப்பினர் பதவியை பெற்றுத் தந்தது.

புத்தாயிரமாண்டிற்கு பிறகு இணையம் பிரபலமானாலும், இணைய வசதிக்கு வெளியே இருந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக இருந்தது. இவர்களும் இணையத்தை பயன்படுத்த வேண்டும் எனும் நோக்கில் செயல்பட்டு வந்த மார்த்தாவுக்கு பிரிட்டன் அரசின் சார்பில் டிஜிட்டல் சாம்பியனாக செயல்படும் வாய்ப்பும் கிடைத்தது. அனைவருக்கும் டிஜிட்டல் வாய்ப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தி அவர் நிகழ்த்திய ஓர் உரையே இதற்கு காரணமாக அமைந்தது.

இதனிடையே 2004-ல் அவர் மொரோக்காவில் விடுமுறையில் இருந்தபோது கார் விபத்தில் சிக்கி மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்தார். அவர் குணமாகி வர இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் எனும் நிலையில், விபத்தின் தாக்கம் காரணமாக பல்வேறு சவால்களையும் அவர் எதிர்கொண்ட நிலையில், இந்தக் கட்டுப்பாடுகள் வாழ்க்கைப் புரிதலை மேலும் மாற்றியது.

வாழ்க்கை பற்றிய புதிய பார்வையுடன், டிஜிட்டல் வாய்ப்புகள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதை தமது இலக்காக கொண்டு தொடர்ந்து துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். டாட் காம் யுகத்தின் முகமாக விளங்கியதோடு, இன்றளவும் இணையத்தின் ஆற்றலை வெகுமக்களிடம் கொண்டு செல்வதற்கான முகமாகவும் விளங்கிறார்.

முந்தைய அத்தியாயம் > ஸ்டார்ட் அப் இளவரசிகள் 8: ஜீன் ஆர்மர் பாலி - இணையத்தில் உலாவ வைத்த 'வலை அம்மா'!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3qhZnps

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்