தன்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரேயொரு வாட்ச் மட்டுமே இருந்ததாக விளக்கமளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
மும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து சுங்கத் துறை அதிகாரிகள் ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு வாட்சுகளைப் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், ''நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். என்னிடமிருந்து இரண்டு கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. தோராயமாக ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு வாட்ச் மட்டுமே என்னிடம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது. நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டை செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் வரியை செலுத்துவதை நான் ஏற்கனவே உறுதி செய்துள்ளேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ceGtYbதன்னிடம் ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரேயொரு வாட்ச் மட்டுமே இருந்ததாக விளக்கமளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
மும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவிடமிருந்து சுங்கத் துறை அதிகாரிகள் ரூ.5 கோடி மதிப்பிலான இரண்டு வாட்சுகளைப் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், ''நான் துபாயில் இருந்து சட்டப்பூர்வமாக வாங்கிய அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். என்னிடமிருந்து இரண்டு கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. தோராயமாக ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு வாட்ச் மட்டுமே என்னிடம் இருந்தது. அதன் மதிப்பு ரூ.5 கோடி என்பதும் தவறானது. நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டை செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் வரியை செலுத்துவதை நான் ஏற்கனவே உறுதி செய்துள்ளேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது'' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்