மத்திய அரசின் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அரிசி முற்றிலும் ரேஷனில் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி வருகிற 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் வரை இந்த திட்டம் தொடரும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cJSTYjமத்திய அரசின் இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து, ஏழைகளின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம், பிரதம மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இதன் மூலம் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேசன் கடைகள் மூலம் இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மானிய விலை உணவு தானியத்துக்கு மேல் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் அரிசி முற்றிலும் ரேஷனில் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி வருகிற 30ஆம் தேதியுடன் முடிவடைய இருந்தது. இந்த நிலையில், வரும் மார்ச் மாதம் வரை இந்த திட்டம் தொடரும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்