மேற்கு வங்க மாநிலம் கூச் பெகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரின் வீட்டுக்கு ஒரே நேரத்தில் அவரது நான்கு தோழிகளும் வந்து முற்றுகையிட்ட காரணத்தினால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
விசாரணையில் அந்த இளைஞரின் பெயர் சுபமோய் கர் என்பதும் அந்த மாவட்டத்தில் இயங்கி வரும் மருந்தகம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. அதோடு அவர் ஒரே நேரத்தில் நான்கு பெண்களுடன் டேட்டிங் செய்யும் நோக்கத்தில் பழகி வந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்திகள் சொல்கின்றன.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட நான்கு பெண்களில் ஒருவருக்குதான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததும் மற்றவர்களுடன் தொடர்புகொண்டு பேசி விவரத்தைச் சொல்லி உள்ளார். நான்கு பேரும் ஒரேநேரத்தில் அவரது வீட்டுக்கு செல்லலாம் என திட்டமிட்டு, அதன்படி சென்றுள்ளனர். எப்போதும் போல காலையில் வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த சுபமோய் கர், நால்வரையும் ஒன்றாக பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். அப்போது காரசாரமான வாக்குவாதம் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் அங்கிருந்து சென்ற அவர் தனது அறையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து பருகியுள்ளார்.
இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவர் அபாய கட்டத்தை கடந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுபமோய் கர் குடும்பத்தினர் கருத்து ஏதும் சொல்ல மறுத்துள்ளனர். ஒரே நேரத்தில் நான்கு பெண்களை ஏமாற்றிய இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 9: வானிலை நிலவரத்தை தெளிவாக விளக்கும் பயனுள்ள செயலிகள்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்