Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்களில் 3 வேலையும் இலவச உணவு - முதல்வர் உத்தரவு

அம்மா உணவகங்களில் மழை முடியும் வரை இலவசமாக உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

சென்னையில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வீடு திரும்பும்போது, அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், கடந்த மழைகாலத்தில் 5,000 கோடி ஒதுக்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. கடந்த ஆட்சியில் ஸ்டார்ட் சிட்டி திட்ட பணிக்காக விளம்பரம் செய்யப்பட்டு அதற்கான தொகையும் கொள்ளையடிக்கப்பட்டது. அதேபோல் மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் தூர்வாரும் பணிகளிலும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது.

திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களில் மழைநீர் திட்டத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக 771 கி.மீ ஆகாய தாமரை மற்றும் கழிவுகள் தூர்வாரப்பட்டு ஓரளவிற்கு சீர்செய்யப்பட்டுள்ளது. மழை பெய்தால் கடந்த ஆண்டுகளில் 10 முதல் 15 நாட்கள் மழைநீர் தேங்கியிருக்கும். இந்தமுறை உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளது. தாழ்வானப் பகுதிகள் மற்றும் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மழைநீரை வெளியேற்ற 560 மின் மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

image

மேலும் மழைக்காலம் முடியும்வரை அம்மா உணவகங்கள், மாநகராட்சி சமையல் கூடங்களில் 3 வேலையும் இலவசமாக உணவு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனக் கூறினார். வானிலை ஆய்வுமையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை மனதில் வைத்து தொடர்ந்து முதலமைச்சராகிய நானும், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுகளையும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தொடரும் மழை: புதுக்கோட்டையில் நவ.10ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

தொடர்ந்து, காலதாமதமாக அதிகாரிகள் குழுவை அமைத்துள்ளது என்ற எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு, பொய் சொல்லவே பிறந்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் நேரத்தில் பொய்களை கூறினார். ஆனால் தோல்வியடைந்த கடுப்பில் வெறுப்பில் தொடர்ந்து பொய்களையே பேசி வருகிறார். அதனைபற்றி கவலை இல்லை. எங்களது பணி மக்கள் பணி, மக்களுக்கான பணி அதனை செய்து வருகிறோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் உரிய நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதியளித்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3bRaMnI

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்