இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 3 புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
ராஞ்சியில் நேற்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி தொடரையும் கைப்பற்றியது. இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். கேப்டன் ரோஹித் சா்மா 36 பந்துகளில் தனது 25-வது டி20 அரைசதத்தை விளாசினார். கே.எல். ராகுல் 40 பந்துகளில் தனது 16-வது டி20 அரை சதத்தைக் கடந்தார். நேற்றைய போட்டியின் மூலம் ரோஹித் சர்மா 3 புதிய சாதனைகளை பதிவு செய்துள்ளார்.
கோலி சாதனையை சமன் செய்த ரோஹித்
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக அரை சதங்களை (29) விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் இந்த சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார். நேற்றையை போட்டியில் விளையாடிய போது அவர் தனது 29-வது அரைசதத்தை நிறைவு செய்தார். 25 அரை சதங்களோடு பாகிஸ்தானின் பாபர் ஆசமும், 22 அரை சதங்களோடு ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். இதில் குறிப்பாக, டி20 சர்வதேச போட்டிகளில் நான்கு சதங்களை விளாசிய ஒரே வீரர் ரோஹித் சர்மாதான்.
பார்ட்னர்ஷிப்பில் அதிக சதம்
டி20 சர்வதேச போட்டிகளில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக முறை 100 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் ஜோடியில் ரோஹித் சர்மா இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களான தவான் மற்றும் கேஎல். ராகுலுடன் இணைந்த ரோஹித் சர்மா ஜோடி, தொடக்க விக்கெட்டுக்கு 13-வது முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. பாகிஸ்தானின் பாபர் ஆசம், நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் ஜோடி தலா 12 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஜோடி 11 முறை 100 ரன்னுக்கு மேல் எடுத்துள்ளது.
டி20யில் அதிக சதம் கண்ட ஜோடி
டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சதம் கண்ட ஜோடியில் பாகிஸ்தானின் பாபர் அசாம், - முகமது ரிஸ்வான் ஜோடி முதலிடத்தில் இருந்தது. இந்த சாதனையை நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா - கேஎல். ராகுல் ஜோடி சமன் செய்துள்ளது. தவானுடன் இணைந்து 4 சதங்களைக் கண்டுள்ளதால் ரோஹித் இப்பட்டியலில் இரண்டு முறை இடம்பெற்றுள்ளார்,
பாபர் - ரிஸ்வான் (22 இன்னிங்ஸ்) – 5 சதங்கள்
ரோஹித் - ராகுல் (27) – 5 சதங்கள்
குப்தில் - வில்லியம்சன் (30) – 4 சதங்கள்
ரோஹித் - தவான் (52) – 4 சதங்கள்
ரோஹித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர்களில் ஒருவர் என்பதை அவரது அடுக்கடுக்கான சாதனைகள் எடுத்துரைக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்