சென்னையில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்து இருந்து இருந்தது. அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தனர்.
இது தொடர்பாக நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், கீழ்பாக்கம், அயனாவரம், ஓட்டேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு 428 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3mJjScoசென்னையில் அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 373 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
காற்று மற்றும் ஒலி மாசை கட்டுப்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது. அறிவிக்கப்பட்ட நேரம் கடந்து பட்டாசு வெடிப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்து இருந்து இருந்தது. அரசின் அறிவுறுத்தலை மீறி பலரும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பட்டாசு வெடித்தனர்.
இது தொடர்பாக நேற்று இரவு வரை 373 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். ராயப்பேட்டை, ஐஸ்ஹவுஸ், கீழ்பாக்கம், அயனாவரம், ஓட்டேரி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் கடந்த ஆண்டு 2020-ம் ஆண்டு 428 வழக்குகளும், 2019-ம் ஆண்டு 204 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்