நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தொடங்க இருக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான நியூசிலாந்து அணி நேற்று ஜெய்பூர் வருகை தந்தது. முதல் போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜெய்ப்பூரில் 8 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ‘டாஸ்’ வென்ற அணிகளே, போட்டியில் வென்றது போல, வரும் டி20 தொடரிலும் ‘டாஸ்’ முக்கியப் பங்கு வகிக்கும். தற்போது குளிர்காலம் என்பதால் முதல் போட்டி நடக்கும் ஜெய்ப்பூரில் பனிப்பொழிவு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. இருப்பினும் இதைத் தவிர்க்க ‘ஸ்பிரே’ பயன்படுத்த உள்ளதாக ராஜஸ்தான் கிரிக்கெட் சங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெய்ப்பூர் மைதானத்தில் 25,000 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இந்த போட்டியை நேரில் பார்க்க ரசிகர்களுக்கு 100 சதவீதம் அனுமதி தரப்பட்டுள்ளது.
‘டி–20’ தொடரை விட இந்தியா உடனான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கு முன்னுரிமை கொடுக்க உள்ளதாக நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுள்ளார். டி20உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறிய இந்திய அணி, அந்த தொடரில் இரண்டாமிடம் பிடித்த நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளதுதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா, பயிற்சியாளராக டிராவிட் செயல்பட உள்ளனர். ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பிறகு இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுவாகும்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3cgaKWMநியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நாளை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் தொடங்க இருக்கிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்