இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு முற்றிலும் கலைந்துவிட்ட சூழலில், இன்றைய போட்டி வெறும் சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி, குரூப்-2-ல் இடம் பெற்றுள்ளது. 'சூப்பர் 12' சுற்றின் தொடக்க ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் அடைந்த தோல்விகள் காரணமாக இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு ஊசலாடிக் கொண்டிருந்தது. இருப்பினும் அடுத்த இரு லீக் ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றதுடன் ரன் ரேட்டிலும் ஏற்றம் கண்டதால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு நீடித்து வந்தது. ரன்ரேட் உயர்ந்தாலும், ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி லீக்கில் நியூசிலாந்தை தோற்கடித்தால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு உருவாகும் என்ற சூழலில் நேற்று இவ்விரு அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவின் அரையிறுதி கனவு முற்றிலும் கலைந்தது. குரூப்-2-ல் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கின்றன.
இந்நிலையில், இந்தியா தனது கடைசி லீக்கில் இன்று (நவ.08) நமீபியாவை துபாயில் சந்திக்கிறது. அனுபவமற்ற நமீபியாவை இந்திய அணி எளிதில் வீழ்த்திவிடும் என்பதில் சந்தேகமில்லை என்பதால், இன்றைய போட்டி சம்பிரதாய ஆட்டமாகவே இருக்கும். எனவே இந்த ஆட்டத்தில் சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளித்து விட்டு இதுவரை ஆடாத வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இந்த உலககோப்பையுடன் விராட் கோலி இந்திய 20 ஓவர் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். இதனால் அவர் 20 ஓவர் அணியின் கேப்டனாக விளையாடப்போகும் கடைசி போட்டி இதுவாகும்.
டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ‘நாக் அவுட்’ சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறுவது இது 4-ஆவது முறையாகும். இதற்கு முன் 2009, 2010, 2012 ஆகிய சீசன்களிலும் இந்தியா இதேபோல் அரையிறுதிக்கு முன்னேறாமல் ஏமாற்றத்துடன் வெளியேறியிருக்கிறது.
இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்