சையத் முஸ்தாக் அலி கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் விளையாடுகின்றன.
டெல்லியில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி வென்றது. மற்றொரு அரையிறுதியில் விதர்பா அணியை மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்விரு அணிகளும் தலா 2 முறை சையத் முஸ்தாக் அலி கோப்பையை வென்றுள்ளன.
கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் நான்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக வென்றது. இருப்பினும் நடப்பு சாம்பியனாக வலம் வரும் தமிழ்நாடு அணி 3 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனைப்படிக்க...ஜெய்பீம்: சர்ச்சைகளுக்கு தம்பி ஞானவேல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்: சீமான்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3FB9AS3சையத் முஸ்தாக் அலி கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் விளையாடுகின்றன.
டெல்லியில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், விஜய் சங்கர் தலைமையிலான தமிழ்நாடு அணி வென்றது. மற்றொரு அரையிறுதியில் விதர்பா அணியை மணிஷ் பாண்டே தலைமையிலான கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இவ்விரு அணிகளும் தலா 2 முறை சையத் முஸ்தாக் அலி கோப்பையை வென்றுள்ளன.
கர்நாடகா - தமிழ்நாடு அணிகள் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் நான்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக வென்றது. இருப்பினும் நடப்பு சாம்பியனாக வலம் வரும் தமிழ்நாடு அணி 3 ஆவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதனைப்படிக்க...ஜெய்பீம்: சர்ச்சைகளுக்கு தம்பி ஞானவேல் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்: சீமான்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்