காரைக்காலில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 2005 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 30 செ.மீ. மழை பதிவான நிலையில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் மாதத்தில் அதிக மழை பதிவாகியுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்கிறது. காரைக்காலில் நேற்று காலையில் லேசாக பெய்யத் தொடங்கிய மழை பிற்பகலில் தீவிரமடைந்து அதி கனமழையாக நள்ளிரவு வரை நீடித்தது.
அங்கு 24 மணி நேரத்தில் 26 சென்டி மீட்டர் மழை பொழிந்தது. இதற்கு முன்பு 2005 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி 30 செ.மீ. மழை பதிவானதே அதிகபட்ச மழையாக இருந்தது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து காரைக்காலில் நவம்பரில் அதிக மழை பதிவாகி உள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்