Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கொரோனா கால மாணவர் நலன் 10: சைபர் புல்லியிங் அத்துமீறல் - சிறாருக்கு சட்டம் சொல்லித்தாரீர்!

இக்கட்டுரையை வாசிக்கும் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒரு சிறு குறிப்பு: உங்களை ஒருவர் பாலியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ துன்புறுத்துகிறார் அல்லது துன்புறுத்துவதாக அச்சுறுத்துகிறார் என்றால், அதை பெற்றோரிடம் தைரியமாக சொல்லுங்கள். இந்த விஷயத்தில், உங்கள் மீது எந்தத் தவறும் இல்லையென்பதால், பயமோ தயக்கமோ வேண்டாம். பெற்றோர் உங்களின் குரலுக்கு செவிசாய்க்கவில்லை எனில், விஷயத்தை உங்களுக்கு நம்பிக்கையான யாரேனும் ஒரு பெரியவரிடமோ, ஆசிரியரிடமோ, தலைமை ஆசிரியரிடமோ தெரிவியுங்கள். ஒருவேளை... அனைத்துக்கும் பிறகும் உங்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால், சற்றும் தாமதிக்காமல் 1098 என்ற எண்ணுக்கு அழைத்து, உங்கள் பிரச்னையை புகாராக தெரிவியுங்கள். அதில், உங்களைத் தொடர்பு கொள்பவர், உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை பொதுவெளியாமல் பகிராமல், உங்களுக்கோ உங்களுடைய குடும்பத்துக்கோ எவ்வித பிரச்னையையும் தராமல், உங்களுடைய பிரச்னையை முழுமையாக தீர்த்து வைக்க 100 சதவிகிதம் உதவுவார்.

சரி, இனி தொடரின் அடுத்த அத்தியாத்துக்குள் செல்வோம்.

image

சமீபத்தில் கோவை சிறுமியொருவர், தனது ஆசிரியரொருவர் தனக்கு அளித்த பாலியல் தொந்தரவினால் தற்கொலை செய்திருந்ததார். எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய, அச்சத்துக்குள்ளாக்கிய அந்நிகழ்வு, நம்மை சுற்றி இன்று நேற்று நடக்கும் புதிய நிகழ்வல்ல. பல ஆண்டுகளாக நடக்கிறது. ஒவ்வொரு முறையும், இந்தப் பொதுச் சமூகம் அப்பிள்ளைகளை தற்கொலைக்கு தூண்டுகிறது அல்லது வாழ்நாள் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. இச்சம்பவத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றோரு விஷயம், நம் பிள்ளைகள் பள்ளிக்கு தொடர்ச்சியாக சென்றே, கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகப்போகிறது. அந்தளவுக்கு பள்ளி மற்றும் பொதுசமூகத்துக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவு விரிசலடைந்துவிட்டது. ஆனாலும், இப்படியான பாலியல் அத்துமீறல்கள் குறைந்தபாடில்லை.

image

பள்ளிக்கு வராததால் குழந்தைகளுக்கு கற்றல் இடைவெளி உருவாகுமெனக் கூறி, தமிழ்நாட்டின் பல இடங்களில் குழந்தைகளை நோக்கி பள்ளியே சென்றது. 'ஆன்லைன் க்ளாஸ்' என்ற பெயரில் வீடு தேடி சென்ற பள்ளி, உடன் சில பிரச்னைகளையும் இழுத்துச் சென்றுள்ளது என்பதுதான் இங்கு நாம் பேசவேண்டிய பிரச்னை. எந்தவொரு முயற்சியிலுமே, சாதகம் - பாதகம் இருப்பதுபோலவே இந்த ஆன்லைன் க்ளாஸ் கலாசாரத்திலும் நிறைய பாதகங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது, சைபர் புல்லியிங். அதாவது, இணைய வழியில் குழந்தைகளை பாலியல் ரீதியாகவோ - உணர்வு ரீதியாகவோ - உடல் ரீதியாகவோ துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது.

இந்த சைபர் புல்லியிங், இந்த பொதுமுடக்க காலத்தில் மிகவும் அதிகரித்ததற்கு முக்கிய காரணம், குழந்தைகள் மத்தியிலான வழக்கத்துக்கு அதிகமான செல்போன் உபயோகம்தான். பல வீடுகளில் குழந்தைக்கென தனி வாட்ஸ்-அப் கணக்கு, தனி செல்போன் இருக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பொதுமுடக்கம் அமலிலிருந்த நேரத்தில் அவர்களின் கற்றல் இடைவெளியை குறைத்ததே இந்த தனி செல்போன் பயன்பாடுதான் என்பதால், இவ்விஷயத்தில் குழந்தைகளை நாம் குறைசொல்லக்கூடாது; மாறாக காலத்தையே சொல்லிக்கொள்ளவேண்டும்.

இதுநாள்வரையில், ஆன்லைன் க்ளாஸுக்கான அறிவுரைகள் அனைத்தும் 'அதிக செல்போன் பயன்படுத்தினால் கண்களுக்கு கெடுதல்; பார்வை நலன் கெடும்; சரியாக பசியெடுக்காது; உடல் எடை குறையும் / அதிகரிக்கும்' என்று மட்டுமே குழந்தைகள் மத்தியில் சொல்லிவந்த நாம், இனி அடுத்தகட்டமாக 'சைபர் புல்லியிங் எனப்படும் சதிகாரர்களினின் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது; அதில் சிக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்; ஒருவேளை சிக்கினால் என்னவெல்லாம் செய்ய வேண்டும், எப்படியெல்லாம் அதை கையாள வேண்டும்' என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டியுள்ளது.

image

'பிற காலங்களைவிடவும், இப்போது சைபர் க்ரூம்மிங் / புல்லியிங் குறித்து பேசுவது முக்கியம்' என்று, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும் கல்வி உளவியலாளருமான டாக்டர் சரண்யா ஜெய்குமார் நம்மிடையே பேசினார்.

அவர் விரிவாக பேசுகையில், "இந்த நேரத்தில் சைபர் புல்லியிங் பற்றி அதிகம் பேச வேண்டும், அதுபற்றிய விழிப்புணர்வை நாம் அதிகரிக்க வேண்டும் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன், கேளுங்கள். நான் சமீபத்தில் சந்தித்த ஒரு டீனேஜ் சிறுமி. இன்றைய டீனேஜ் பிள்ளைகள் பலரைப் போல, அவளும் இன்ஸ்டாகிரம் தளத்தில் தனக்கென ஒரு கணக்கை வைத்திருந்திருக்கிறார். அதில் அக்குழந்தை பதிவேற்றிய ஒரு புகைப்படத்தை, ஒரு அறிமுகமில்லா நபர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார். அச்சிறுமியின் முகத்தை, ஆடையில்லா ஒரு உடலுடன் பொருத்தி, அப்புகைப்படத்தை அச்சிறுமிக்கே அனுப்பி அவளை பயமுறுத்துகிறார். அந்தச் சூழலில், அந்தக் குழந்தை அதை தன் பெற்றோரிடமும் சொல்ல முடியாமல் - வேறு யாரிடமும் பகிர முடியாமல் தவித்து, மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானாள். ஒருவழியாக இறுதியில் விஷயம் எங்களிடம் வந்து, நாங்கள் அந்நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறுமியை மீட்டோம். இந்த உதாரணத்தை நான் சொல்ல காரணம், ஒரு குழந்தை மிக மோசமான மன உளைச்சலுக்கு உள்ளாகும்போதும், அதை தன் பெற்றோருக்கு தெரியப்படுத்தாமல் மறைக்க நினைக்கிறது என்பதை நாம் எப்படி புரிந்துக்கொள்வது? அந்தளவுக்கு நம் குழந்தைக்கு நாம் ஒரு பாதுகாப்பாற்ற சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றே எனக்கு சொல்ல தோன்றுகிறது.

image

பெற்றோரை பொறுத்தவரை, இப்படியான மார்ஃபிங் - பாலியல் அத்துமீறல் புகார்களில், அவர்கள் மிக மிக சென்சிட்டிவாக இருக்கிறார்கள். வெளியில் யாருக்காவது தெரிந்துவிட்டால், 'குடும்ப மானம்' என்னாகிவிடும்; குழந்தையின் எதிர்காலம் என்னாகிவிடும் என்றே பல பெற்றோர் நினைக்கிறார்கள். அதனால் விஷயத்தை மூடி மறைக்க தவறிழைக்கும் நபரிடம் தொடர்பை முறிப்பது, அவரை எச்சரித்து அனுப்பிவிடுவது, வீட்டுக்குள் குழந்தையோடு அமர்ந்து பஞ்சாயத்து நடத்துவது என்றிருக்கிறார்கள். இவ்விஷயத்தில் பெற்றோர் மட்டுமல்ல, ஆசிரியர்கள் - தலைமை ஆசிரியர்கள் என குழந்தைக்கு தங்கள் மட்டத்திலேயே பிரச்னையை முடித்து வைக்கவே நினைக்கிறார்கள். இவையாவும், இன்னொரு குழந்தைக்கு நிகழாது என்பதற்கு என்ன நிச்சயம் என்பதை, இப்படியானவர்கள் யோசிப்பதே இல்லை. குற்றமிழைக்கும் ஒரு நபருக்கு, வெறும் எச்சரிக்கையும் - பஞ்சாயத்தை கூட்டுவதுமே போதுமென சமூகம் நினைக்கிறதா? இளம் பிள்ளைகளின் அறியாமையையும் அச்சத்தையும் பயன்படுத்தும் ஒருவரை, இந்தச் சமூகம் இவ்வளவு எளிதில் எப்படி மன்னிக்க முடியும்? அது எப்படி சரியாகும்?

image

இப்படியான பஞ்சாயத்துகளிலெல்லாம், பாதிக்கப்பட்ட குழந்தையின் முன்னேவும் நடக்கிறதென்பது இன்னும் வேதனை. பஞ்சாயத்துக்கு இடையிடையில், " 'நீ ஏன் இணைய தளத்தை பயன்படுத்தினாய் / ஃபோட்டோ பதிவு போட்ட? அதுல அக்கௌண்ட் ஓபன் பண்ணல்ல... உனக்கு இது தேவைதான். நீ வாய்ப்பு கொடுக்கலைன்னா, அவங்க ஏன் அப்படி நடந்துக்கப்போறாங்க. உண்மையை சொல்லு, நீ என்ன செஞ்ச' என்றெல்லாம் கேட்டு, குழந்தையை குற்றவாளியாக்குகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களை குறைகூறும் இந்தப் போக்கு, நிச்சயம் மாற வேண்டும். அது முழுக்க முழுக்க இந்த பொதுசமூகத்தின் கூட்டு முயற்சிதான். சக மனிதர்களால் திட்டமிடப்பட்டு செய்யப்படும் ஒரு சதியில், பாதிக்கப்பட்டவரை குறை சொல்வது எந்த வகை நியாயம்?

இந்த இடத்தில் போக்ஸோவில், மிக முக்கிய அம்சமொன்றை, குறிப்பிட நினைக்கிறேன். 'ஒரு குழந்தை, தன்னையொருவர் பாலியல் ரீதியாக / உணர்வு ரீதியாக / உடல் ரீதியாக யாரோ ஒருவர் துன்புறுத்துகிறார் என்று பெரியவர்கள் (பெற்றோர், உடன்பிறந்தோர், தெரிந்தவர்கள் என யாராவதொருவர்) யாரேனும் ஒருவரிடம் சொல்கிறதென்றால் அதை அவர்கள் உடனடியாக காவல்துறைக்கோ 1098 என்ற எண்ணுக்கோ புகார் தெரிவிக்க வேண்டும். தெரிவிக்காவிட்டால், பின்னாளில் அக்குழந்தையின் புகார் வெளிவருகையில், அந்த நபர் குற்றத்தை மறைத்ததற்காக போக்ஸோ சட்டத்தின்படி கைது செய்யப்படுவார்'.

சமீபத்திய கோவை மாணவியின் வழக்கில், போக்ஸோ சட்டம் தலைமையாசிரியர் மீதே பாய்ந்தது இப்படித்தான். அந்த தலைமையாசிரியரும், பாதிக்கப்பட்ட மாணவியின் முன்னிலையில் ஒரு பஞ்சாயத்தை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தாவது, இனி வரும் காலத்தில் குற்றங்களை புகார்களாக அரசுக்கு தெரிவியுங்கள் என பெரியவர்களை கேட்டுக்கொள்ள விழைகிறேன் நான்.

image

பல வருடங்களாக நாம் நம் குழந்தைகளிடையே நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து பேசிவருகிறோம். சொல்லப்போனால், பாடப்புத்தகங்களிலும்கூட அதை கொண்டுவந்தாயிற்று. அதன் பலன்தான், இன்று பெரும்பாலான குழந்தைகள் அதுகுறித்து அறிந்து வைத்திருக்கிறார்கள். தன்னை ஒருவர் தவறாக தொடுகிறார் என்றால், அதை குழந்தை இப்போது தைரியமாக வந்து பெற்றோரிடம் சொல்கிறது. ஆனால், இதுவே சைபர் புல்லியிங் என்றால் அதே தைரியத்துடன் வந்து 'என்னை ஒருவர் தொந்தரவு செய்கிறார்' என சொல்வதில்லை. இதற்கு முதல் காரணமாக குழந்தைக்கே இதுபற்றிய தெளிவான புரிதல் இல்லை என்பதையும் நாம் இங்கு ஒத்துக்கொள்ளவேண்டும். அதனால்தான் சொல்கிறேன், சைபர் புல்லியிங் குறித்து பெற்றோரிடமும், குழந்தைகளிடமும் நாம் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வை அதிகப்படுத்துவது மட்டுமே போதாது. உடன், குழந்தைகளுக்கு அநீதிக்கு எதிரான போராட்ட வடிவத்தை பெற்றோரும் மற்றோரும் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கு, பெற்றோரும் மற்றோரும் கூடுதல் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். இன்றைய தேதிக்கு, பெரியவர்களுக்கே இதுபோன்ற சைபர் புல்லியிங்-ஐ சரியாக கையாள தெரியவில்லை என்பதால், அரசு அடுத்தகட்டமாக சட்ட விழிப்புணர்வை பள்ளிகளில் விரிவுப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சியில்தான், என்னைப் போன்றோர் இருக்கிறோம். ஊடகங்கள் வழியாகவும் செய்கிறோம்.

இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான செய்தி வரும்போதெல்லாம் பலரும் 'வெளிநாட்டிலெல்லாம் இப்படியான குற்றங்களுக்கு எவ்ளோ கடுமையான தண்டனை இருக்கு தெரியுமா? நம்ம நாட்டிலும் அப்படி இருந்தால், குற்றம் குறையும்' என சொல்ல கேட்க முடிகிறது. ஆனால் நம் நாட்டிலும் சட்டம் இருக்கிறது. போக்ஸோ-வினால், மிக கடுமையான நடவடிக்கைகளை குற்றவாளியின்மேல் எடுக்கப்பட முடியும்.

image

நிறைய பெற்றோர் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தயங்குகிறார்கள். அடிப்படையில் அவர்கள் சமூகத்தை நினைத்து பயப்படுகின்றார்கள். சமூகம் அவர்களுக்கு தைரியம் கொடுப்பதைவிட்டுவிட்டு, மீண்டும் மீண்டும் 'குடும்ப மானம்' 'குழந்தையுடைய எதிர்காலம்' என ஒழுக்க நெறி என்ற புள்ளியில் வந்துநின்று, அதையே கற்பித்துக்கொண்டிருக்கிறது. இந்த 'ஒழுக்கம் - கலாசாரம்'தான், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தையை குற்றவாளியாக்கி அதில் குளிர்காய்கிறது. ஆகவே ஒழுக்க நெறியை விட்டுவிட்டு, சட்டத்தை கற்பியுங்கள் எல்லோரும். சட்டம், குழந்தைகளுக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையை விதையுங்கள், மக்களே" என்றார்.

உலகம் வளர வளர, தவறிழைப்போருக்கான வழிகளும் மாறுகிறது. அவர்களின் சதிவலையில் நாம் சிக்காமல் இருக்க முயல்வோம்; ஒருவேளை சதிவலையில் சிக்கினாலும், அதை விரைந்து உணர்ந்துக்கொண்டு, அப்படியான நபர்களை சட்டத்தின் உதவியுடன் எதிர்ப்போம். சட்டத்தை நம்புவோம். இனியாவது, பாதிக்கப்பட்டோரை விட்டுவிட்டு, பாதிப்பை ஏற்படுத்தியவரை தண்டிப்போம்.

முந்தைய அத்தியாயம்: கொரோனா கால மாணவர் நலன் 9: 'ப்ரவுசிங் ஹிஸ்டரி காட்டுவது எதை?' - உடனடி தேவை, மனநல முகாம்கள்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3Dlgo5P

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்