பஞ்சாபில் ஆட்சி அமைத்தால், வீட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திற்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதற்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் வகுத்து வருகின்றன. இந்நிலையில், மோகாவில் நடந்த ஆம் ஆத்மி கட்சியின் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாபில் வரும் 2022 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்தால் பெண்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். ஒரு குடும்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இந்தத் திட்டத்தின்படி மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3CGOhg7

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்