தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூரில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் 7ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், தென்கிழக்கு வங்கக்கடலில் நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கணித்திருக்கிறது. மேலும் தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்று கணித்திருக்கிறது.
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதாலும், கேரள, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதாலும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி
நேற்று தமிழகத்தில் அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்தில் 11செ.மீ மற்றும் ராசிபுரத்தில் 8 செ.மீ மழை பதிவானது. அதேபோல், பேரையூர், சிவகாசி, சேலம், பெலாந்துறையில் தலா 7 செ.மீ மழை பதிவாகி இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3q55s8xதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்