Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ராணிப்பேட்டை: வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே திமுக அதிமுக பிரமுகர்கள் கடும் வாக்குவாதம்

தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக எவ்வித அசம்பாதவிதமும் இன்று நடந்துவருவதாக் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேநேரம் ராணிப்பேட்டை சிப்காட் அரசு பள்ளி வாக்குச்சாவடி மைய வளாகத்தில் திமுக - அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டையில் முதற்கட்டமாக வாலஜாபாபேட்டை, ஆற்காடு, திமிரி ஆகிய 3 ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இடங்களில் நடந்துவருகிறது. இதில் ராணிப்பேட்டையிலுள்ள ஒரு வாக்குச்சாவடி மையத்தில் திமுக-வினர் வாக்குச்சாவடிக்கு வெளியே வாக்கு சேகரிப்பதாக கூறி அதிமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி: விழுப்புரம்: தனி ஊராட்சி கோரிக்கையை ஏற்காததால் தேர்தல் வாக்குப்பதிவை புறக்கணித்த மக்கள்

image

சிப்காட் பகுதியை சுற்றிய பகுதியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு செய்துவிட்டு சென்றார். இந்த வாக்குச்சாவடி மையத்தில், தேர்தல் நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் இடைவெளிக்குட்பட்டே திமுக பிரசார நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தும் ஆட்சியர் அதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை எனக்கூறி, அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடும் வாக்குவாதத்தை தொடர்ந்து காவல்துறையினர் அங்கு வந்து அவர்களை விலக்கினர். பின்னர் தொடர்ந்து வாக்குப்பதிவு தொடர்ந்தது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3Dcti5B

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்