“நீர் அடித்து நீர் விலகாது” எனவே அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, சசிகலா, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அதிமுக கொடிகட்டிய காரில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சென்ற அவர், அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி கல்வெட்டையும் சசிகலா திறந்து வைத்தார். அதில், அதிமுகவின் பொதுச்செயலாளார் வி.கே.சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படங்கள், கார், எம்.ஜி.ஆரின் விருதுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் எம்.ஜி.ஆர் பேரன் குமார் எழுதிய, 'எனக்கு மட்டும் தெரிந்த எம்ஜிஆர்' என்ற புத்தகத்தை சசிகலா வெளியிட்டார். இதையடுத்து, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா, அங்கு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர் குடும்பத்தினருடன் அமர்ந்து சசிகலா இளநீர் அருந்தினார். பின்னர், எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அதிமுக பொன்விழா மலரை சசிகலா வெளியிட்டார்.
இதனைப்படிக்க...கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? - ஜெயக்குமார் கேள்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3aPT9nu“நீர் அடித்து நீர் விலகாது” எனவே அதிமுகவினர் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை கொண்டு வர வேண்டும் என சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார்.
அதிமுகவின் பொன்விழா ஆண்டையொட்டி, தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு, சசிகலா, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அதிமுக கொடிகட்டிய காரில், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்திற்குச் சென்ற அவர், அதிமுகவின் கொடியை ஏற்றி வைத்தார். பொன்விழா ஆண்டு கொடியேற்றும் நிகழ்வையொட்டி கல்வெட்டையும் சசிகலா திறந்து வைத்தார். அதில், அதிமுகவின் பொதுச்செயலாளார் வி.கே.சசிகலா என பொறிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் உள்ள புகைப்படங்கள், கார், எம்.ஜி.ஆரின் விருதுகள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். பின்னர் எம்.ஜி.ஆர் பேரன் குமார் எழுதிய, 'எனக்கு மட்டும் தெரிந்த எம்ஜிஆர்' என்ற புத்தகத்தை சசிகலா வெளியிட்டார். இதையடுத்து, ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் இல்லத்திற்கு சென்ற சசிகலா, அங்கு எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். எம்.ஜி.ஆர் குடும்பத்தினருடன் அமர்ந்து சசிகலா இளநீர் அருந்தினார். பின்னர், எம்.ஜி.ஆர் காது கேளாதோர் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அதிமுக பொன்விழா மலரை சசிகலா வெளியிட்டார்.
இதனைப்படிக்க...கல்வெட்டில் பெயர் போட்டால் பொதுச்செயலாளர் ஆகிவிட முடியுமா? - ஜெயக்குமார் கேள்வி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்