சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள மலைகளில் விமானங்களை வீழ்த்தக்கூடிய அதிநவீன எல் 70 ரக சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய - சீன படைகள் இடையே கடந்தாண்டு லடாக் பகுதியில் மோதல் மூண்டதிலிருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனாவும் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் ராணுவத்தினரை பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல் 70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது.
ஏற்கனவே எம் 777 ரக சிறு ஏவுகணைகள், போஃபோர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில் அவற்றுடன் தற்போது எல் 70 ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லையில் படைகளின் தயார் நிலை குறித்து ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எல்லையில் படை பலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: அருணாச்சலப் பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3ndFrANசீனாவை ஒட்டிய எல்லைப் பகுதியில் உள்ள மலைகளில் விமானங்களை வீழ்த்தக்கூடிய அதிநவீன எல் 70 ரக சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய - சீன படைகள் இடையே கடந்தாண்டு லடாக் பகுதியில் மோதல் மூண்டதிலிருந்து எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. சீனாவும் எல்லையில் தனது படைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வருவதுடன் ராணுவத்தினரை பயிற்சியிலும் ஈடுபடுத்தி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தில் சீனாவை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள மலைகளில் எல் 70 ரக அதிநவீன விமான எதிர்ப்பு சிறு ஏவுகணைகளை இந்தியா நிறுத்தி வைத்திருக்கிறது.
ஏற்கனவே எம் 777 ரக சிறு ஏவுகணைகள், போஃபோர்ஸ் பீரங்கிகளை இந்தியா நிறுத்தியுள்ள நிலையில் அவற்றுடன் தற்போது எல் 70 ஏவுகணைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லையில் படைகளின் தயார் நிலை குறித்து ராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக எல்லையில் படை பலம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: அருணாச்சலப் பிரதேச எல்லையில் பீரங்கிகளை குவித்தது இந்தியா!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News
0 கருத்துகள்