Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாஜக மீது கைவைத்தால் திமுகவிற்கு வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் - அண்ணாமலை

பாஜக மீது கைவைத்தால் திமுகவிற்கு வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், '' தீபாவளி இனிப்பு வாங்குவதற்காக, ஒரு சாதாரண கடைக்கு சென்றபோது, ஒரு நாள் எவ்வளவு விற்று முதல் செய்வீர்கள் என கேட்டதற்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் என்றார். நம்முடைய போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் , 100 கோடிக்கு மேல் விற்று முதல் செய்யும் நிறுவனங்களிடம் தான் தீபாவளி இனிப்பு வாங்குவதாக கூறுகிறார்.

தமிழகத்தில் கட்டுமணி, கமிஷன் மணி, ஊழல் ஆரம்பித்து விட்டதாக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகிறது. இன்னமும் தமிழக முதலவர் மௌனம் காண்பிப்பது ஏன்?. ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி வீட்டில் ஆதிதிராவிடர் விடுதியில் பணி செய்யக்கூடிய உறுப்பினர்களை சிப்ட்டு போட்டு வேலை வாங்கப்படுகிறது. ஆட்சி அமைத்து 5 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு பிரச்னைகள் ஆரம்பிக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கே வெற்றி... அண்ணாமலை சொல்லும் காரணம் இதுதான்..! | BJP wins local elections... This is the reason why Annamalai says..!

மத்திய அமைச்சர் பிரகலான் ஜோஷி இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது என கூறியுள்ளார். மழை காரணமாக தடை செய்யப்பட்ட தடையை கூட சரி செய்துள்ளார். ஆனால், தமிழக அமைச்சர் நிலக்கரி தொடர்பாக பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது. ஏனெனில், நிலக்கரி ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் உள்ளனர். அதேபோல், மின்சாரத்தை ரூபாய் 20 க்கு வாங்கவில்லை எனக்கூறி தற்போது வாங்கியது தொடர்பாக கதை சொல்கிறார்கள். தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வைத்திருப்பது தமிழக மக்களுக்கு மின்சார கொடுப்பதற்காக அல்ல, தமிழக மின்சார அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காக தான் இந்த வாரியம் செயல்படுகிறது.

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது. இதேபோல் தான் தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது. தற்போது 60 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. அரசியலுக்காக மட்டுமே தான் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்.ஆதாரப்பூர்வமாக அடிப்படையில் தமிழக அரசு குற்றம் சுமத்த எந்தவித முகாந்திரமும் கிடையாது.தமிழகம் இனிமேல் தாங்காது. ஒரு குடும்பத்தின் வளம் காக்க, ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக நேர்மையான அதிகாரியை ஊழல்வாதிகளாக மாற்றுகின்றனர்.

கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்... பாஜக தலைவர் அண்ணாமலை கையில் எடுக்கும் புதிய அஸ்திரம்..! | Annamalai plan to interaction with college students - Tamil Oneindia

நேர்மையாக நிறுவனம் நடத்த முயன்றால், அலைக்கழிக்கப்படுகிறார். பிரதமர் மோடி, ஊழல் செய்தவர்கள் எங்கு இருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என சொல்லியுள்ளார் . அது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும். அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன். தொட்டு பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என காத்திருக்கிறோம், தொட்டு பார்க்கட்டும். ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர் பாபு அரசியல் செயகிறார். பாஜக, 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது.

திமுக பாஜக மீது கைவைத்தால் வட்டியும், முதலுமாக திருப்பி கொடுக்கப்படும். தமிழக முதல்வர் விழித்துக்கொள்ள வேண்டும். தமிழக மக்களுக்கு நலனுக்காக இருக்க வேண்டும், ஊழலை எதிர்க்க வேண்டும். அமைச்சர்களும் புரிந்துக்கொண்டு, அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் சரியாக பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம். ஒரு தொகுதியில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டல் விடுக்கக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3G9twfY

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்