Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

லக்கிம்பூர் படுகொலை: மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் கைது

https://ift.tt/2WYghgp

உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூரில் நிகழ்ந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். லக்னோவில் காவல்துறையினரின் விசாரணைக்கு ஆஜரான அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்கிம்பூரில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது, விவசாயிகள் மீது கார் மோதியது. இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள காவல்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியது. அவர் ஆஜராகாத நிலையில், மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து லக்கிம்பூர் காவல் நிலையம் சென்ற ஆசிஷ் மிஸ்ராவிடம், சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
 
அவரிடமிருந்து செல்போன்களை கைப்பற்றிய காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தினர். அப்போது, சம்பவத்தன்று அந்த பகுதியில் தான் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரங்களை ஆசிஷ் மிஸ்ரா அளித்ததாகக் கூறப்படுகிறது. எனினும், விசாரணைக்குப் பிறகு ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
 
image
இதனிடையே, ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்யக் கோரி, பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சித்து நடத்திய போராட்டத்தை விலக்கிக் கொண்டார். லக்கிம்பூர் வன்முறையில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ராம் காஷ்யப் வீட்டின் முன்பு சித்து போராட்டம் மேற்கொண்டிருந்தார். அதேநேரத்தில் லக்கிம்பூர் படுகொலை சம்பவம் தொடர்பாக உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மற்றும் அவரது மகனை கைது செய்ய வேண்டும் என சன்யுக்த் கிசான் மோர்சா தலைவர் யோகேந்திர யாதவ் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் போராட்டமும் நடைபெற்றது.
 
இந்த சூழ்நிலையில் லக்கிம்பூர் படுகொலை சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக உத்தரபிரதேச அரசு சார்பில் அமைக்கப்பட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப் குமார் ஸ்ரீவத்ஸ்வா தலைமையிலான ஒரு நபர் குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இரண்டு மாதத்திற்குள் இந்தக்குழு தனது விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க உள்ளது.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்