Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சென்னை: சாலையை கடக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளர் - கார் மோதி உயிரிழப்பு

சென்னையில் சாலையை கடக்க முயன்ற உதவி ஆய்வாளர் மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (26). இவர் சென்னை காமராஜர் சாலை டி.ஜி.பி அலுவலகத்தில் உள்ள டெக்னிக்கல் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்றிரவு பணி முடிந்து டி.ஜி.பி அலுவலகம் வெளியே  உதவி ஆய்வாளர் பிரசன்னா சாலையைக் கடக்க முயன்றார்.

image

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று உதவி ஆய்வாளரான பிரசன்னா மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்த உதவி ஆய்வாளர் பிரசன்னா சுயநினைவின்றி கிடந்ததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அவரை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த  மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த விபத்துச் சம்பவம் குறித்து காரை ஓட்டி வந்த வடபழனி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைப்படிக்க...வீரப்பன் நினைவு தினம்: இறுதிநாள்களில் போலீஸார் வலைக்குள் வீரப்பன் வந்த வரலாறு! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3vmEw4M

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்