Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு 'நட்சத்திர காவலர் விருது' - காவல் ஆணையர்

https://ift.tt/3nr0wrD

ஒவ்வொரு மாதமும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றக்கூடிய காவலர்களுக்கு 'நட்சத்திர காவலர் விருது' மற்றும் ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காவல்துறையில் சிறப்பாக புலனாய்வு செய்து குற்றவாளிகளை கண்டறியும் காவலர்களை பாராட்டும் விதமாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி வருகிறார். இந்நிலையில் கூடுதலாக, ஒரு மாதத்தில் சிறப்பான மற்றும் மெச்சத்தகுந்த வகையில் பணியாற்றும் காவலர்களை தேர்ந்தெடுத்து 'நட்சத்திர காவலர்' என்ற விருதை வழங்கி அவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வெகுமதி மற்றும் செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

image

குறிப்பாக ஒவ்வொரு மாதம் 5 ஆம் தேதி தலைமையிட கூடுதல் ஆணையர் தலைமையிலான குழு, சிறப்பாக மற்றும் மெச்சத்தகுந்த வகையில் பணிபுரியும் காவலர்களை கண்டறிந்து பணி மதிப்பீடு செய்து வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறப்பாக பணிப்புரியும் காவலர்களின் பெயரை அந்தந்த துணை ஆணையர், கூடுதல் ஆணையர் தலைமையிடத்திற்கு பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் அனைத்து காவலர்களுக்கும் சென்றடைவதை அனைத்து நோடல் மற்றும் சிறப்பு பிரிவு காவல் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்