Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

போதைப்பொருள் விவகாரத்தில் மகன் கைது - ஸ்பெயினில் இருந்து இந்தியா திரும்பிய ஷாருக்கான்

சொகுசு கப்பலில் நடைபெற்ற கேளிக்கை விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
பாலிவுட் திரையுலகுடன் பின்னிப் பிணைந்தது போதைப் பொருள் சர்ச்சை. உதாரணமாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையை தொடர்ந்து, போதைப் பொருள் பயன்பாடு பாலிவுட்டில் பூதாகரமாக வெடித்தது. அது சற்றே தணிந்திருந்த நிலையில், தற்போது போதைப் பொருள் விவகாரத்தால் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது பாலிவுட். இம்முறை பரபரப்புக்கு காரணம் பாலிவுட்டின் கிங் என்றழைக்கப்படும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
 
வார இறுதி நாளான சனிக்கிழமை மதியம் மும்பையில் இருந்து கோவாவுக்கு 'எம்பிரஸ்' என்ற உல்லாசக் கப்பல் புறப்பட்டது. அப்போது போதைப் பொருள் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் அதில் பயணிகள் போல் ஏறிக் கொண்டனர். சொகுசு கப்பலில் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்ற போது, அனைவருக்கும் போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அதிகாரிகள் போதைப் பொருட்களை விநியோகம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 8 பேரை சுற்றி வளைத்தனர்.
 
image
கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், அவர்கள் எட்டு பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் என தெரியவந்தது. அவரது வாட்ஸ் ஆப் சாட் மூலம் பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் நெட்வொர்க்கை கண்டறிய தீவிரம் காட்டி வருகின்றனர். 8 பேரிடமும் சுமார் 20 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
 
கைதை தொடர்ந்து ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் மற்றும் இரண்டு பேர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். 8 பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் டெல்லி மற்றும் ஹரியானாவை சேர்ந்த இரண்டு பேர் போதைப் பொருளை விநியோகித்திருக்கலாம் என போதைப் பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். மேலும், சொகுசு கப்பல் நிர்வாகத்திற்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரம் பாலிவுட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனிடையே, பதான் திரைப்பட ஷூட்டிங்கிற்காக ஸ்பெயினில் இருந்த ஷாருக்கான், படப்பிடிப்பை அவசர அவசரமாக ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
 
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3uEDtgk

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்