Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

ரிஷப் பண்டுக்கு விக்கெட் கீப்பிங் பயிற்சி கொடுத்த தோனி!

https://ift.tt/3vwrTUX

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற நிலையில் 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். 

image

இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பயிற்சி ஆட்டத்தின் போது இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்டுக்கு கீப்பிங் பயிற்சி கொடுத்துள்ளார். 

ஆட்டம் நடந்துக் கொண்டிருந்த போது பவுண்டரி லைனுக்கு பக்கமாக தோனி, பண்டுக்கு பயிற்சி கொடுத்துள்ளார். அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன. சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான அமீரக ஆடுகளங்களில் கீப்பர் பண்டின் பணி கொஞ்சம் கூடுதலாக தேவைப்படுகிறது. 

View this post on Instagram

A post shared by ESPNcricinfo (@espncricinfo)

அதன் காரணமாக தோனி தனது அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்ட ஆட்ட நுணுக்கங்களை பண்ட் உடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார் என சொல்லப்படுகிறது. டி20 உலகக் கோப்பையின் முதல் எடிஷனை இந்தியா வெல்ல உதவியவர் அப்போதைய இந்திய கேப்டன் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்